இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் புதிய நடைமுறை!

0

இலங்கையில் புதிய போக்குவரத்து நடைமுறையை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வீதி கட்டமைப்பில் காணப்படும் பல்வேறு போக்குவரத்து தவறுகளை அறிந்து கொண்டு, புதிய சட்டத்தை செயற்படுத்த RFID தொழில்நுட்பம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் வீதி போக்குவரத்து நெரிசல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கும், அதனை முகாமைத்துவம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கு வாகனங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒட்டப்படும் இரண்டு ஸ்டிக்கர்களில் RFID டெக் உள்ளடக்கப்படுகின்ற நிலையில், பின்னர் அதனை வாசிக்கும் உபகரணம் ஒன்று வீதியில் பொருத்தப்படவுள்ளது.

அதற்கமைய அதனை வாசிக்கும் உபகரணம் இதுவரையிலும் வீதியில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ டெக் எனப்படும் RFID சிப்பிற்குள் 2000 பையிட்ஸ் அல்லது அதற்கு குறைவான தரப்பு அளவு சேமிப்பு திறன் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தடுத்து வைக்கும் சிப் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்க ஜன்னல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

scanning antenna மூலம் வெளியாகும் ரேடியோ அலைகள் மோதும் போது இது இயங்க ஆரம்பித்து சிப்பில் உள்ள தகவல்களை பெற்றுக் கொள்ள முடிகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதை தேய்த்தால் அழுக்கான வெள்ளை Shoe 2 நிமிடத்தில் புதுசு போல பளபளக்கும்! – வீடியோ பதிவு!
Next article10 வயதில் திருமணம்…தெருவில் பிச்சையெடுப்பு: இன்று உலகை திரும்பி பார்க்க வைத்த பெண்!