இலங்கையின் நிலை என்ன? இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

0

இலங்கையின் நிலை என்ன? இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு மீட்பு மணி நடைபெற்று வருகிறது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அந்த பகுதியில் உள்ள வீடுகள் பல இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்துள்ளது.

அங்கு உயிரிழப்பு இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

அங்கு சமயங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

இதனது தாக்கம் இலங்கையில் உணரப்பட வில்லை என்பதுடன் இலங்கையின் அனர்த்த முகாமத்துவ மையம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்பில் எது விதமான தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சில வேளைகளில் இப்படியான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அதனை அன்டிய பகுதிகளின் கடல் மட்டத்தின் நிலக் கீழ் தட்டில் அசைவுகளை உண்டாக்கும் போது சில அதிர்வுகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கலாம் சில வேளைகளில் இல்லாமலும் போகலாம் எனவே மக்கள் அவதானமாக இருப்பது காலத்தின் கட்டாயம் எனக் கூறப்படுகிறது வானிலை ஆய்வாளர்களால்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article30.07.2018 இன்றைய ராசிப்பலன் – திங்கட்கிழமை!
Next articleபொலிவான முகத்தைப் பெற இயற்கை முறையில் வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி? இதோ உங்களிற்காக!