Home Jaffna News இராணுவ பேச்சாளர் கூறிய தகவல்! படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் கொல்லப்பட்டனரா?

இராணுவ பேச்சாளர் கூறிய தகவல்! படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் கொல்லப்பட்டனரா?

0
511

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க, இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து கருத்து தெரிவிக்கையில்,

“இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை.

சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தானது அடிப்படை ஆதாரமற்றது என குறிப்பிட்டுள்ள அவர், இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாகவும்” கூறியுள்ளார்.

Previous articleதொடர்ந்து 15 மரணங்கள்..! அடுத்த மரணத்தை எண்ணி பீதியில் மக்கள்..! இலங்கையில் திகிலூட்டும் கிராமம்!
Next articleயாழில் பெண் சட்டத்தரணி ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஏற்பட்டுள்ள நிலை!