ஒரு பல் பூண்டு இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ! கொழுப்பு இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.

0

கொலஸ்ரோலால் அவதிப்படுபவர்கள்; தினமும் தவறாது நாட்கணக்காக, மாதக்கணக்காக இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து மென்று சாப்பிட்டு வரும் போது நாளடைவில் கொழுப்பு இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.

பூண்டு பயன்கள் :

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் இல்லற வாழ்வினை இனிதாக்க முடியும்.

ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் என்பனவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிடுதல் போதுமானது.

ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிடும் போது இலகுவான சமிபாட்டினை பெறலாம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் என்பன் பூண்டு சாப்பிட்டு வரும் போது ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக காணப்படுவதுடன் அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டாலும் அது உடனே குணமாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

பூண்டினை உணவில் சேர்க்கும் போது அதிலுள்ள சத்துக்கள் குறையக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதனால்;, அப்படியே கடித்து விழுங்குவது சிறப்பான பலனைத் தரும்.

நம்முடைய குடலில் உள்ள புழுக்களும் தானாகவே வெளியேறிவிடுவதுடன், பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து அவற்றை சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதனால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதனால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.

தொண்டை கரகரப்பின் போது நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்குதல் உடனடி நிவாரணமாகும்.

வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சீர்செய்யும்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது, சர்க்கரை அளவை சீராக்கி இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கின்றது.

ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட்டு வரும் போது அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வரும் போது இரத்த அழுத்தம் குறைவடையும்.

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட்டு வரும் போது கேன்சர் புண்கள் விரைவில் ஆறிவிடும்.

பூண்டில், அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளதனால் இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது எமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறும்.

கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டினை இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசி வரும் போது, நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டு வரும் போது சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் நீங்கிவிடும். எனினும் இந்நோய் குணமாகியவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிடுதல் வேண்டும்.

அலர்ஜியை விரட்டுவதற்கு பூண்டினை மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது என சாப்பிட்டு வருதல் வேண்டும்;.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்துதல் மூலம் விடுபட முடியும்.

பல்வலி நீங்குவதற்கு ஒரு விழுதை கடித்து அதன் ரசம் படும்படி செய்தல் வேண்டும்.

அதிகப்படியான கொழுப்பு மற்றும் மூட்டுவலி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வலிநிவாரணியாக காணப்படுகின்றது.

பூண்டில் பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் காணப்டுகின்றது.

பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வரம் போது வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

பூண்டு சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவுவதுடன், மூட்டு வலி மற்றும் வாயுப் பிடிப்பினையும் நீக்கும்.

பூண்டில் உள்ள ஈதர் எமது நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 12.4.2018!
Next articleஎந்த பொருள் உள்ளே போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு!