இரவில் ஏன் நிர்வாணமாகத் தூங்க வேண்டும்! முக்கிய காரணங்கள்!

0

இரவில் ஏன் நிர்வாணமாகத் தூங்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்குவது நம்முடைய மூளையின் செயற்பாட்டு திறனை அதிகரிக்கும்.

முக்கிய காரணங்கள்!

இந்த உலகில் வெறும் 8% பேர் மட்டுமே இரவில் ஆடைகளின்றி நிர்வாணமாக உறங்குகிறார்கள், ஆனால் இப்படி ஆடைகளின்றி உறங்குவதில் பல நன்மைகள் உள்ளதாகத் தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. இரவில் நிம்மதியாக உறங்குவதால் நல்ல உடல் ஆரோக்கிய, சிறந்த தாம்பத்திய உறவு, காயங்களில் இருந்து விரைவான விடுதலை, தெளிவான நினைவாற்றல் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும்.

அந்த நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் நிர்வாணமாகத் தூங்குவதே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். நீங்கள் ஏன் நிர்வாணமாகத் தூங்க வேண்டும் என்பதற்கான அந்த 4 காரணங்கள் என்னவென்று பார்ப்போமா?

1. நல்ல தூக்கம் கிடைக்கும்:

இரவில் நன்றாகத் தூங்குவது நம்முடைய மூளையின் செயற்பாட்டு திறனை அதிகரிக்கும். உறக்கம் என்பது நமது மூளை நரம்பணுக்களில் இருக்கும் நச்சுக்களை நீக்குகின்ற ஒரு செயல், இந்த நச்சுக்கள் நமது மூளையில் தங்கினால் அது நம்முடைய சிந்திக்கும் திறனையே பாதிக்கக் கூடும். இந்த பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க இரவில் ஆடைகளின்றி தூங்குவது ஒரு சிறந்த தீர்வு என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. ஏனெனில் ஆறுவியலின் அடிப்படையில் இவ்வாறு நிர்வாணமாக உறங்குவது என்பது உங்கள் உடலின் வெப்ப அளவைக் குறைத்து நல்ல நிம்மதியான தூக்கத்தை தரக் கூடியது.

2. மன அழுத்தத்தைக் குறைக்கும்:

அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் எண்ணற்ற பிரச்னைகளையும் சிக்கல்களையும் சந்திக்கின்றோம். அதனால் ஏற்படும் மன அழுத்தம் பின்னாளில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையே சிதைக்க தொடங்கிவிடும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடத் தூக்கம் ஒன்றே ஒரு நல்ல மருந்தாகும், அந்த நிம்மதியான தூக்கம் ஆடைகளின்றி உறங்குவதால் எளிதில் கிடைக்கும்.

3. உடல் எடை குறையும்:

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தி, பின்னாளில் உடல் பருமனையும் குறைக்கக் கூடும். ஆடைகளின்றி தூங்குவதன் மூலம் இரவு முழுவதும் நமது உடலின் வெப்ப அளவு குறைந்து உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது. மேலும் அழுத்தமான ஆடைகளை அணியாததால் உடலின் ரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் பாய இது ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.

4. தன்நம்பிக்கையை அதிகரிக்கும்:

அனைவரும் அவர் அவருடைய உண்மையான ஒப்பனைகள் இல்லாத அழகின் மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும், அதற்கு இப்படி ஆடைகளின்றி உறங்குவது ஒரு நல்ல தீர்வாகும். இதனால் உங்கள் உடலின் மீதான நம்பிக்கையும், உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் ஏற்படும் நன்மைகள்!! மாற்றங்கள்!!
Next articleயாழ்ப்பாணத்திலுள்ள நபருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! சீட்டிழுப்பில் பல கோடி ரூபா பணப்பரிசு.