ஒருவருக்கு இரத்தசோகை (அனீமியா) இருந்தால் இவ்வாறான‌ முக்கிய அறிகுறிகள் வெளிப்படும்!

0

உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறைவடைவதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று கூறுவதுடன், இத்தகைய இரத்த சோகையானது அடிக்கடி காணப்படும் போது அது மஞ்சள் காமாலை, புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருககலாம். எனவே, உடலில் இரத்தம் குறைவாக உள்ளதா இல்லையா என்பதனை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்தவகையில், இரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்காக, உடலில் ரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படுவதல் அதாவது அனீமியா மற்றும் தாலசீமியா, போன்ற பரம்பரை நிலைமைகள், தொற்றுகள், மருந்துகள் போன்றவற்றினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் இரும்புச்சத்து குறைவடைவதனாலோ, இரும்புச்சத்து குறைவான உணவு உட்கொள்கிறவர்களுக்கு காலப்போக்கில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டோ, வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்காக மருந்துகள் எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் ரத்தசோகை ஏற்படலாம்.

இரத்தசோகையின் முக்கிய அறிகுறிகள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி உடல் நிலையானது சரியில்லாமல் போதல்.

கண்களில் மாற்றம்: கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல் நிறமற்று காணப்படுதல்

முடி உதிர்தல்: ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், கூந்தல் உதிர ஆரம்பித்தல்.

சோர்வு: தொடர்ந்து ஒரு மாதமாக உடலில் சோர்வாக காணப்படுதல்

வெளுத்து காணப்படுதல்: சருமம் ஒரு மஞ்சள் நிறம் கலந்த ஒருவித வெள்ளை நிறத்துடன் காணப்படுதல் அதாவது அனீமியா

மயக்கம் அல்லது குமட்டல்: காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படுதல்

தலை வலி: மூளைக்கு தேவையான இரத்தம் செல்லாததனால் தலைவலி ஏற்படுதல்.

மூச்சு திணறல்: சரியாக சுவாசிக்க முடியாமை, சிறிது தூரம் நடந்தாலும், அதிகமாக மூச்சு வாங்குதல்

விரல்கள்: விரல்களை அழுத்தும் போது மாற்றமின்றி வெள்ளையாகவே காணப்படுதல்

சீர் செய்வோம்

பீன்ஸ், நட்ஸ், அசைவ உணவுகள், காய்கறிகள், பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள், இலந்தை, கொடி முந்திரி, உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதன் மூமும், தினமும் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலமும் சரி செய்துகொள்ள முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூக்கடைப்பு பிரச்சனையை இரண்டு நிமிடத்தில் சரிசெய்ய இதை செய்யுங்க!
Next articleகீல்வாதம் உள்ளவர்கள் வெள்ளரியை இப்படி சாப்பிடுங்க! ஆனா கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் அதிகம் சாப்பிடாதீங்க!