இரக்கமற்ற பயணிகளால் விபரீதம்!கைக்குழந்தையுடன் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட தம்பதி!

0
451

விமானத்தில் இருந்து திடீரென இறக்கி விடப்பட்டதால், தங்கள் கைக்குழந்தையுடன் தம்பதியினர் தவிப்பிற்கு ஆளாகினர். இரக்கமற்ற பயணிகள் சிலரால், அவர்களுக்கு இந்த சோகம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்டு (Detroit) நகரை சேர்ந்தவர் யோஷி அட்லர். இவரது மனைவி ஜென்னி. யோஷி அட்லர்-ஜென்னி தம்பதியினருக்கு சுமார் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த சூழலில் யோஷி அட்லர் தனது குடும்பத்துடன் மியாமி நகருக்கு சுற்றுலா சென்றார். பின்னர் கடந்த புதன் கிழமை இரவு (23ம் தேதி), அங்கிருந்து டெட்ராய்டு திரும்ப அவர்கள் ஆயத்தமாயினர். இதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் யோஷி அட்லர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றடைந்து விட்ட யோஷி அட்லர் குடும்பத்தினர், வழக்கமான பரிசோதனைகளை முடித்து கொண்டு, விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். ஆனால் விமானம் புறப்பட தயாரான சூழலில், யோஷி அட்லர் குடும்பத்தினர் மட்டும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

அத்துடன் விமானத்தின் கதவுகளை மூடிய விமான ஊழியர்கள், யோஷி அட்லர் குடும்பத்தினரை விமான நிலையத்தின் வாயிலுக்கு அனுப்பி வைத்தனர். கைக்குழந்தையுடன் இருந்த தங்களை திடீரென விமானத்தில் இருந்து இறக்கி விட்டதால், யோஷி அட்லர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் காரணமாக கைக்குழந்தையுடன் விமான நிலையத்தில் அவர்கள் தவிக்க நேரிட்டது. பின்னர் தங்களை விமானத்தில் இருந்து இறக்கி விட்டது ஏன்? என்பது தொடர்பாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் யோஷி அட்லர் விசாரித்தார்.

அப்போது யோஷி அட்லர் குடும்பத்தினரின் உடலில் இருந்து விரும்பத்தகாத மணம் வீசியதாகவும், இதனால் ஒரு சில பயணிகள் புகார் செய்தனர் எனவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் உங்களை விமானத்தில் ஏற்ற அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனவும் அவர்கள் கூறினர்.

இதன் காரணமாகதான் உங்கள் குடும்பத்தை விமானத்தில் இருந்து இறக்கி விட்டோம் என விமான நிறுவன அதிகாரிகள் யோஷி அட்லரிடம் தெரிவித்தனர். இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான யோஷி அட்லர், தங்கள் மீது எந்த தவறும் இல்லை என கூறி பார்த்தார்.

ஆனால் விமான நிறுவன அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதன் காரணமாக விமான நிலையத்திலேயே அவர்கள் கைக்குழந்தையுடன் தவிக்க நேரிட்டது. கைக்குழந்தையுடன் தம்பதியை விமானத்தில் இருந்து இறக்கி விட்டதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

என்றாலும் அன்றைய தின இரவை கழிப்பதற்காக யோஷி அட்லர் குடும்பத்தினருக்கு ஹோட்டல் அறை, உணவு வழங்கியதாகவும், அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மறுநாள் காலை மற்றொரு விமானத்தில் அவர்களுக்கு டிக்கெட் கொடுத்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous article2019 ஆம் ஆண்டுக்கான கேது பெயர்ச்சி எப்போது வருகிறது? அது எந்தெந்த ராசிகளை பாதிக்கும்?
Next articleவாயடைத்துப் போன ரசிகர்கள்!யாஷிகா வெளியிட்ட அட்டகாசமான காணொளி!