இப்பொழுது நமக்கு தேவையான பியூட்டி பொருட்களை எல்லாம் வீட்டிலேயே உருவாக்கும் முறை வந்துவிட்டது. இதன் மூலம் நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை நமது சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. அதாவது முகத்திற்கான பேஸ் பேக்ஸ், மாஸ்க், ஆயில் மற்றும் பல வீட்டிலேயே தயாரிக்க முடிகிறது. எனவே இப்பொழுது உங்கள் கூந்தலுக்கான ஹெர்பல் ஷாம்புவை வீட்டிலேயே தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.




