Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam இப்போது விமானத்தில் பயணிக்கும் போது நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டு பெற்றுக்கொள்ள முடியுமாம்!

இப்போது விமானத்தில் பயணிக்கும் போது நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டு பெற்றுக்கொள்ள முடியுமாம்!

0
1036

இப்போது விமானத்தில் பயணிக்கும் போது நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டு பெற்றுக்கொள்ள முடியுமாம்!

விமானப் பயணிகளுக்கு ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் வாரி வாரி வழங்கும் சலுகைகளைத் தவிர்த்து இன்னபிற வசதிகளையும் வழங்குகின்றன.

இதையெல்லாம் கேட்கலாமா என்றுகூட உங்களுக்கு தோன்றும் அளவுக்கு சில சலுகைகளை விமானநிறுவனங்கள் உங்களுக்கு வழங்குகின்றன. நீங்க யோசிப்பது புரிகிறது அதும் கூட சில விமானங்களில் கிடைக்கும்.

நீங்கள் மிகவும் பசியாக இருந்தால் வேண்டுமென்ற உணவை கேட்டு பெறலாம். திரும்பவும் கேட்கலாம். சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு சில விமானங்களில் சமையலறைக்கே உங்களை அழைத்துச் செல்கிறார்கள் தெரியுமா?

குழந்தைகளின் விளையாட்டுத்தனம் அதிகமாகும்போது, அல்லது உங்களால் உங்கள் துணையுடன் தனிமையை அனுபவிக்க வேண்டும் எனும்போது குழந்தைகளை பராமரிக்கவும் ஒருசில விமானங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சில விமானங்களில் விமானம் எப்படி இயங்குகிறது. எங்கிருந்து அழைப்பு கிடைக்கிறது. எப்போது கிளம்பவேண்டும். எப்போது இறங்கவேண்டும் என்பதுபோன்ற ரகசியங்கள் தவிர்த்த சில விசயங்கள் பயணிகள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலுதவி மருந்துகள் மற்றும் பிற அவசரத்துக்கு தேவையான மருந்துகள் விமானத்திலேயே கிடைக்கின்றன.

பொதுவாக விமானத்தில் கொடுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமரவேண்டும் என்பது விதி. சில விமானங்கள் கட்டுப்பாடுகளுடன் சில சமயங்களில் இருக்கையை மாற்றித் தருகின்றன.

பிறந்தநாள், திருமண நாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு விமானத்திலேயே கேக்குகள் தரப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் உங்கள் பிறந்த நாளை தெரிந்துகொண்டு அவர்களாகவே கேக் அளித்து சிறப்பு செய்கின்றனவாம்.

விமானத்தில் அவசரகதியில் உயில் எழுதவும் வாய்ப்பு தரப்படுகிறதாம். இது மிக மிக அரிய நிகழ்வாகும்.

சில விமான சேவை நிறுவனங்கள் தவிர்த்து சானிட்டரி நாப்கின்களை பெரும்பாலான விமானங்களில் தரப்படுகின்றன.

மதுப் பிரியர்கள் உற்சாகப் பானங்களை அளவோடு பருக விமான நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன.

Previous articleபட்டப் பகலில் கல்லூரிக்குள் புகுந்து பெண்ணுக்கு முகநூல் நண்பன் செய்த காரியம்!
Next articleஇந்த நடிகை 5 நிமிடத்திற்கு 5 கோடி வாங்கியிருக்கிறாராம்! அவரோட ரேட் றொம்ப அதிகமாம்!