இந்த வேம்பாளம் பட்டை (காட்டாமணக்கு) ரத்தன் ஜோட் அல்லது ஆல்கானா டின்டோக்ரியா, பொதுவாக அல்கானெட் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு பட்டை குடும்பத்தை சார்ந்தது. இந்த வேம்பாளம் பட்டை மரத்தின் வேர் பகுதியானது சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிவப்பு நிற டை தயாரிக்க இதை பயன்படுத்துகின்றன.
அதுமட்டுமல்லாமல் உணவுப் பொருட்களுக்கு சிவப்பு நிறமூட்டியாகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதன் நன்மை இதோடு நின்று விடாமல் ஏராளமான உடல் நல நன்மைகளை அள்ளித் தருகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் இதை பாரம்பரிய பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நம்மளுக்கு எத்தகைய நன்மைகளை தருகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.
பராம்பரிய பயன்கள்
வெரிகொஸ் வீன்ஸ், படுக்கை புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கு வேம்பாளம் பட்டையை பயன்படுத்தலாம். தீராத இருமல் கூட இந்த 2 பட்டையை போட்டு டீ குடித்தால் நின்று விடும். வயிற்று போக்கு, அல்சர் மற்றும் சரும காயங்களை இதைக் கொண்டு குணப்படுத்தலாம்
டீ
இதன் டீ அஸ்ட்ரிஜெண்ட் மாதிரி பயன்படுகிறது வயிற்று அல்சருக்கு சிறந்த ஹோமியோபதி மருந்தாக உள்ளது 2 பட்டையை போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் போதும் சிறுநீரக கற்கள், மஞ்சள் காமாலை, காயங்கள், வயிற்று போக்கு, எலும்பு முறிவு போன்றவற்றை சரியாக்கி விடுமாம். இதனுடன் ஆலிவ் ஆயில், பிஸ்டாசியா அட்லாண்டிகா மற்றும் லாரல் போன்ற மூலிகைகளையும் சேர்த்து பயன்படுத்தி வந்தால் கால்களில் ஏற்படும் இரத்தக் கட்டு சரியாகி விடும்.
வெண்ணெயுடன்
இந்த பட்டையை பட்டர் (வெண்ணெய்) உடன் சேர்த்து அழற்சி மற்றும் தீக்காயங்களுக்கு போடலாம். இந்த பட்டையுடன் பெருங்காயம், கருஞ்சீரகம் சேர்த்து காயங்களுக்கு பற்று போடலாம். விரைவில் ஆறி விடும் வெண்ணெய்யுடன் சேர்த்து இதை பயன்படுத்தி வந்தால் கண் பிரச்சினைகள் சரியாகி விடுமாம்.
தலைவலி
வேம்பாளம் பட்டையில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைவலியை குறைக்கிறது. இதன் வேர் தலைவலிக்கு சிறந்த மருந்து.
காய்ச்சல்
வேம்பாளம் பட்டை குளிர்ச்சியான ஒன்று. இது உடம்பு சூட்டை தணிப்பதால் காய்ச்சலுக்கு பயன்படுகிறது. வியர்வையை அதிகரித்து காய்ச்சலை குறைத்து விடும்.
தழும்புகள்
சருமத்தை பழைய நிலைக்கு மாற்றுவதில் இது பெரிதும் உதவுகிறது. எனவே தான் இதை பேஸ் மாஸ்க், பேசியல் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். சரும தொற்றுகள் வராமல் தடுக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை தீப்பட்ட காயங்களை கூட ஆற்றி விடும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளைக் கூட சரி செய்ய வல்லது.
தூக்க பிரச்சினைகள்
இந்த பட்டை யிலிருந்து பெறப்படும் எண்ணெய் தூக்க வியாதியை சரி செய்கிறது. இன்ஸோமினியா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த எண்ணெய்யை லேசாக தலையில் மற்றும் மூக்கில் தேய்த்து கொண்டால் மன அமைதி அடைந்து நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியம்
இந்த பட்டையை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும், குடித்து வந்தால் நல்லது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நீர் உடம்பில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
சரும ஆரோக்கியம்
இதில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே இதைக் கொண்டு மாஸ்க் தயாரித்து முகத்திற்கு போட்டால், சுருக்கங்கள், சரும நிறத்திட்டுகள் போன்றவை குணமாகும். வேம்பாளம் பட்டை எண்ணெய், பொடி இரண்டுமே சருமத்திற்கு நல்லது.
நகங்கள் மற்றும் கூந்தல் பராமரிப்பு
இந்த பட்டை மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது. இதன் எண்ணெய் தலைமுடி உதிர்வு, வழுக்கை பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. இதன் எண்ணெய்யை நகங்களில் தடவி வந்தால் உடைந்த நகங்கள் சரியாகி விடும். நகங்களில் ஏற்படும் தொற்று, நகச்சுத்தி, நகப்புண்கள் எல்லாவற்றையும் சரியாக்கி விடும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் வராது.
டிஸ்மெனோரியா (மாதவிடாய் பிரச்சினைகள்)
இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, பிடிப்பு போன்றவற்றை சரி செய்கிறது.
நுமேட்டிக் நோய் (கால், மூட்டு வலி)
தசைகளில் மற்றும் மூட்டுகளில் அழற்சியால் ஏற்படும் வலியை சரி செய்கிறது. ரூமேட்டிராய்டு ஆர்த்ரிட்டீஸ் போன்றவற்றிற்கு சிறந்தது. இதன் எண்ணெய்யை தொடர்ந்து மூட்டுகளில் தடவி வந்தால் சீக்கிரம் வலி, அழற்சி குறைந்து விடும்.
பூஞ்சை தொற்று
சருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை போக்க பெரிதும் உதவுகிறது. படர் தாமரை, எக்ஸிமா போன்றவற்றிற்கு இதை தடவி வந்தாலே போதும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். ஹெர்பஸ் போன்ற வாயைச் சுற்றி ஏற்படும் புண்களை சரியாக்கவும் பயன்படுகிறது.
சமையல் பயன்கள்
இந்த பட்டை யிலிருந்து தயாரிக்கப்படும் ரெட் கலர் டை வொயின், ஆல்கஹாலிக் பானங்கள் போன்றவற்றை நிறமூட்ட பயன்படுகிறது. வெஜிடபிள் ஆயில், வார்னிஸ் போன்றவற்றிலும் பயன்படுகிறது. புகழ்பெற்ற இந்திய டிஷ்ஷான ரோகன் ஜோஸ்’ இதைக் கொண்டு தான் நிறமேற்றப்படுகிறது. இதன் இலைகளை காய வைத்து சமையலில் பயன்படுத்துகிறார்கள். இது உணவிற்கு நல்ல நறுமணத்தை கொடுக்கக் கூடியது.
இதர நன்மைகள்
இதன் வேர்கள் பொடியாக்கப்பட்டு எண்ணெய்யுடன் சேர்த்து மர பர்னிச்சர்களுக்கு கலரூட்ட பயன்படுகிறது. லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனப் பொருட்களில் நிற மூட்ட பயன்படுகிறது இதன் ரெட் கலர் டை மருத்துவ துறையிலும், அதே நேரத்தில் மர வேலைப்பாடுகள் ரோஸ்வுட் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் டை திரவத்தின் கார அமிலத் தன்மையை கண்டறிய தெர்மோமீட்டரில் பயன்படுகிறது. அந்த காலத்து பிரஞ்சு நாட்டு பெண்மணிகள் இதைத் தான் மேக்கப் பவுடராக பயன்படுத்தி வந்தார்கள்.
கவனத்தில் வைக்க வேண்டியவை
கருவுற்ற பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை உபயோகிக்க கூடாது. இதன் வேரை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் அழற்சி, நுரையீரல் அழற்சி, இதயம் செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். இதிலுள்ள பைரோலலிசிடின் அல்கலாய்டு பொருளால் கல்லீரலில் நச்சு தேங்கலாம். எனவே இதை போதுமானது அளவு மட்டுமே பயன்படுத்தி வாருங்கள். எதையும் சரியாக பயன்படுத்தி வந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைப்பதோடு ஆரோக்கியமாக வாழ முடியும்.