நாம் நினைத்த இடத்திற்கெல்லாம், நினைத்த நேரங்களில் நம்மை அழைத்து செல்பவை நமது கால்கள் தான். நம்மை மிகவும் சுதந்திரமாக உணர செய்வதே கால்கள் தான். இந்த கால்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவு தான். கிட்டத்தட்ட நடக்க முடியாத பிணமாக நாம் மாறி விடுவோம்.
இப்படி கால் வீக்கமோ அல்லது பாத வீக்கமோ இருந்தால் இந்த 10 நோய்களும் உள்ளது என அர்த்தமாம்!
மற்ற முதன்மையான உறுப்புக்களை போன்று கால்களையும் நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும். ஆனால், இன்றைய கால கட்டத்தில் நமது கால்களில் தான் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கால் வீக்கம், பாத வீக்கம், கணுக்கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்பட்டால் நிச்சயம் இவை மோசமான நோய்களுக்கான அறிகுறியாக தான் இருக்க கூடும்.
இதயம் முதல் சிறுநீரகம் வரை இதனால் பாதிப்பு உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அது என்னென்ன நோய்கள் உள்ளது என்பதை குறிக்கும் என இனி அறிந்து கொள்வோம்.
இரத்தம் ஓட்டமின்மை
பொதுவாக கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அவை உணர்த்தும் முதல் அறிகுறி சரியான இரத்த ஓட்டம் இல்லாமை தான். நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் இல்லாமல் போனால் இது போன்ற பாதிப்பு உண்டாகும். இவை கால்களை பாதிப்பதோடு, இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளையும் பாதிக்க கூடும்.
சிறுநீரகம்
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்குவதே. இந்த வேலை சரியாக நடைபெறாமல் இருந்தால் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்றுகள் உண்டாகி பாதிக்க செய்யும். இதற்கான அறிகுறியை கால்கள் வீக்கம் அடைவதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரல்
பொதுவாகவே, கல்லீரல் ஆல்புமின் என்கிற புரதச்சத்தை உற்பத்தி செய்யும். இவை இரத்தத்தில் சீரான அளவு இல்லாமல் போனால் நிச்சயம் கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் தான் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும்.
மாத்திரைகள்
கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் இது போன்ற அபாய நிலை கால்களுக்கு ஏற்பட கூடும். நமது உடலுக்கு முற்றிலுமாக பாதிப்பை ஏற்படுத்த கூடிய மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொண்டால் கால்கள் வீக்கம் பெறும். மேலும், இந்த நிலை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் வேறு சில உறுப்புகளும் தாக்கப்படும்.
இதயம்
இவ்வாறு பாதங்கள் மோசாமான அளவு பாதிக்கப்பட்டால் அவை இதயம் பாதித்துள்ளதையும் குறிக்கிறது. மேலும், இதய குழாய்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் மோசமான அளவு பாதித்துள்ளதை இது குறிக்கிறது.
உப்பு
உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து கொண்டாலும் கால் பகுதியில் வீக்கம் ஏற்படும். உடலில் தேவைக்கு அதிகமாக உப்பு சேர்த்து கொண்டால் நிச்சயம் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த நிலை மன அழுத்தம், குழப்பம் ஆகிய பாதிப்புகளையும் உண்டாக்கும்.
உடல் எடை
உடலின் எடை அதிக அளவில் இருந்தால் கால்கள் வீக்கம் பெறும். காரணம், உடலில் கொழுப்பு அதிகமாகி இரத்த ஓட்டத்தை பாதித்து, கால்களில் வீக்கத்தை உண்டாக்குகிறது. சிலருக்கு இது அதிக உடல் அழுத்தத்தையும் தரும்.
ஹார்மோன் குறைபாடு
கால் பகுதியில் வீக்கம் ஏற்படுவது மேலும் சில ஹார்மோன் பிரச்சினையை குறிக்கிறது. ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களில் சிலருக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட கூடும்.
நோய் தொற்றுகள்
கால்களில் வீக்கம் ஏற்படுவதற்கு நோய் தொற்றுகளும் முக்கிய காரணம் தான். மேலும், இது ஆரம்ப நிலையில் சிறிய பிரச்சினையாக தொடங்கி அதன் பின்னர் மிகவும் மோசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். நாளுக்கு நாள் இந்த வீக்கம் அதிகரித்து மற்ற உறுப்புங்களுக்கும் ஆபத்தை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது.
சர்க்கரை நோய்
கால் பகுதியில் வீக்கம் உண்டாகினால் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது என அர்த்தமாம். இரத்த ஓட்டம் பாதிப்பு, நரம்பு சார்ந்த பிரச்சினை, நோய் தொற்றுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு இருந்தால் இது போன்று ஏற்படும்.




