இப்படியுமா Youtube இல் பிரபலம் ஆகணும்?

0
844

அமெரிக்காவின்,விஸ்கான்சின் மாகாணத்தில் வாழும், டிம் ஃபிரிடே என்பவர் ஆட்களைக் கொல்லும் நஞ்சுடைய பாம்புகளிடம், வேண்டுமென்றே கடிபடும் செயல்பாட்டை, காணொளியாக எடுத்து, Youtube இல் வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி எல்லோரும் பேசவேண்டும் என இவ்வாறு Youtube இல் தான் பதிவு செய்யவில்லை என்றும், பாம்பின் நஞ்சை, கொஞ்சம் கொஞ்சமாக உடலில் செலுத்துவதன் மூலம், ஒருவர் தனது உடலில் பாம்புக் கடிக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட முடியும் என்ற கொள்கையை, பரிசோதனை செய்து பார்க்கவே இவ்வாறு செய்வதாகவும் கூறுகிறார்.

இதனால், தன்னுடைய வீட்டில் பல கொடிய விஷமுள்ள பாம்புகளை வளர்த்து, தினமும் கடிக்க விட்டு, மருத்துவம் மேற்கொள்ளுகிறாராம்.

இருப்பினும் இந்த செயற்பாட்டுக்கு, பலர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.ஆபத்தான முறை இது எனவும் கூறுகின்றனர்.

Previous articleTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book !
Next articleYoutube ஐ பார்த்து பொப்கோர்ன் செய்ய முயற்சித்த சிறுமி உயிரிழந்தார் !