Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 21.01.2019 திங்கட்கிழமை !

இன்றைய ராசிப்பலன் – 21.01.2019 திங்கட்கிழமை !

0
1393

இன்றைய பஞ்சாங்கம்
21-01-2019, தை 07, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.46 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.27 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தை பூசம். முருக வழிபாடு நல்லது. வடலூர் ஜோதி தரிசனம்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.

சிம்மம்
இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்
இன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும்.

மகரம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கும்பம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். நினைத்தது நிறைவேறும்.

மீனம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

Previous articleகண்டங்கத்தரி (வட்டுக்கத்தரி) யின் மருத்துவ குணங்கள்! Kandankathiri Benefits in Tamil Vattu Kathirikai Payangal
Next articleவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!