Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 08.05.2019 Today rasi palan – 08.05.2019 !

இன்றைய ராசிப்பலன் – 08.05.2019 Today rasi palan – 08.05.2019 !

0
1217

இன்றைய பஞ்சாங்கம்
08-05-2019, சித்திரை 25, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 12.59 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 03.59 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிடைக்கும். வருமானம் பெருகும். பொருளாதார நிலை உயரும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர்.

மிதுனம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும்.

துலாம்
இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று விலகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைக்கவும்.

தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.

மீனம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 07.05.2019 Today Rasipalan !
Next articleதலை அரிப்பு தொல்லைக்கு தீர்வு தரும் துவரம் பருப்பு!