இன்றைய ராசிப்பலன் – 02.08.2019 வெள்ளிக்கிழமை !

0

இன்றைய பஞ்சாங்கம்
02-08-2019, ஆடி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 01.36 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.29 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

ரிஷபம்
இன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.

மிதுனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.

கடகம்
இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.

தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்களே பாருங்க இந்த கருப்பு மஞ்சள் செய்யும் அதிசயத்தை ! உடனே வாங்கி வீட்ல வைங்க !
Next articleஇந்த இடத்தில் கைவைத்து அழுத்தினால் என்னவாகும்? ஒரே புகைப்படத்தில் பல ரகசியம்!