இன்றைய ராசிபலன் 25.6.2018 திங்கட்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 25.6.2018 திங்கட்கிழமை !

25.6.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 11-ம் நாள்.
திரையோதசி திதி. பிறகு துவாதசி காலை 7.15 வரை பிறகு விசாகம் நட்சத்திரம் காலை 7.34 முதல். யோகம்: மரண-சித்த யோகம்.

குளிகை: 1:30 – 3:00
சூலம்: கிழக்கு.
பொது: பிரதோஷம். திருநெல்வேலி சுவாமி தந்தப் பல்லக்கு, அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கில் பவனி, மதுராந்தகம் கோதண்டராமர் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திரப் பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00

மேஷம் : பேராசை
ரிஷபம் : பாசம்
மிதுனம் : உயர்வு
கடகம் : ஆதரவு
சிம்மம் : பெருமை
கன்னி : நோய்
துலாம் : அமைதி
விருச்சிகம் : விவேகம்
தனுசு : வாழ்வு
மகரம் : பக்தி
கும்பம் : புகழ்
மீனம் : தடங்கல்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்: அநாவசியப் செலவு களைக் கட்டுப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு-. பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப்பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்ட அவுரி இலை குடிநீர்! பயன்கள்!
Next articleபொருத்தம் பார்க்காம திருமணம் செஞ்சுடாதீங்க!!