Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 23.6.2018 சனிக்கிழமை !

இன்றைய ராசிபலன் 23.6.2018 சனிக்கிழமை !

0
1089

இன்றைய ராசிபலன் 23.6.2018 சனிக்கிழமை !

23.6.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 9-ம் நாள்.
வளர்பிறை தசமி திதி காலை 7.12 வரை பிறகு ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் காலை 6.03 வரை பிறகு சுவாதி. யோகம்: மரணயோகம் காலை 6.03 வரை பிறகு அமிர்தயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் விருஷப சேவை, திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் உற்சவாரம்பம்.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : மகிழ்ச்சி
ரிஷபம் : சாதுர்யம்
மிதுனம் : முயற்சி
கடகம் : காரியங்கள்
சிம்மம் : நம்பிக்கை
கன்னி : இன்பம்
துலாம் : சிந்தனை
விருச்சிகம் : சுபவிரயம்
தனுசு : சந்தோசம்
மகரம் : வரவு
கும்பம் : தெளிவு
மீனம் : பிரச்னை

மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்-. தாய்வழியில் மதிப்புக் கூடும். புது வேலை அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையா ட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

தனுசு: எதையும் சாமர்த்தியமாக சமாளி ப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

மகரம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திட்டம் நிறைவேறும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Previous articleவெண்ணெய் நல்லதா? அல்லது வெண்ணெயை உருக்கி வரும் நெய் நல்லதா?யாரெல்லாம் தவிர்க்கலாம்? உடல் எடையை கூட்ட உணவோடு வெண்ணெய்!
Next articleதப்பித் தவறியும் இந்த பொருட்களை மட்டும் தானமா கொடுத்துடாதீங்க!