இன்றைய ராசிபலன் 20.4.2018!

0

இன்றைய ராசிபலன் 20.4.2018

20.4.2018 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 7-ம் நாள்.
வளர்பிறை பஞ்சமி திதி இரவு 11.14 வரை பிறகு சஷ்டி. மிருகசீரிஷ நட்சத்திரம் இரவு 11.28 வரை பிறகு திருவாதிரை. முகூர்த்த நாள், சங்கர ஜெயந்தி. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு.
பொது: சமயபுரம் தெப்பம், சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருச்சி ஆகிய தலங்களில் சித்திரைப் பெருவிழா.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.

மேஷம் : நன்மை
ரிஷபம் : உழைப்பு
மிதுனம் : எச்சரிக்கை
கடகம் : வெற்றி
சிம்மம் : புகழ்
கன்னி : சந்தோஷம்
துலாம் : அமைதி
விருச்சிகம் : அன்பு
தனுசு : அந்தஸ்து
மகரம் : நட்பு
கும்பம் : மகிழ்ச்சி
மீனம் : சிந்தனை

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம்: நண்பகல் 12.14 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும், உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். நண்பகல் 12.14 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டு கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்: நண்பகல் 12.14 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உறவினர், வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். நண்பகல் 12.14 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். அமோகமான நாள்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்பத்திரிக்கையாளர் கன்னத்தை தடவிய கவர்னருக்கு கண்டனம்!
Next articleஅதிர்ஷ்டம் கொட்டும் நட்சத்திரங்கள்! இதில் எது உங்களுடையது?