Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 2.7.2018 திங்கட்கிழமை !!

இன்றைய ராசிபலன் 2.7.2018 திங்கட்கிழமை !!

0
1267

இன்றைய ராசிபலன் 2.7.2018 திங்கட்கிழமை !!

2.7.2018 திங்கட்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 18-ம் நாள்.
சதுர்த்தி திதி. பிறகு சதுர்த்தி மாலை 6.26 வரை பிறகு அவிட்டம் நட்சத்திரம் இரவு 11.10 முதல். யோகம்: சித்த யோகம்.
குளிகை: 1:30 – 3:00
சூலம்: கிழக்கு.
பொது: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் ஸப்தாவரணம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
பரிகாரம்: தயிர்.

திங்கள்
நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00

மேஷம் : லாபம்
ரிஷபம் : பாசம்
மிதுனம் : நலம்
கடகம் : வெற்றி
சிம்மம் : உயர்வு
கன்னி : ஆர்வம்
துலாம் : கவனம்
விருச்சிகம் : சிக்கல்
தனுசு : வீம்பு
மகரம் : சிந்தனை
கும்பம் : மேன்மை
மீனம் : ஓய்வு

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

கடகம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங் குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பி றந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றி பெறும் நாள்.

மகரம்: காலை 10மணிக்கு மேல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: காலை 10மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்: எளிதில் முடிய வேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

Previous articleவீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் !
Next articleஇது நீங்க பிறந்த தேதியா? அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்! சரியானு பாருங்க?