இன்றைய ஆண்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய புத்தரின் வாழ்க்கை உணர்த்தும் பாடங்கள் இதுதான்!

0

உலகில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களில் புத்த மதமும் ஒன்று. மற்ற மதங்களை போல அல்லாமல் மனிதர்களில் புனிதராக வாழ்ந்த ஒருவரை கடவுளாக ஏற்றுக்கொண்டு அவரின் போதனைகளின் படி அமைதி மாரக்கத்தில் பயணிக்கும் ஒரு மதம் புத்த மதமாகும். புத்தரின் போதனைகளே இந்த மதத்தை இன்றும் வழிநடத்தி செல்கிறது.

புத்தரின் போதனைகள் எக்காலத்திற்கும் பொருந்த கூடியவை ஆகும். புத்தரின் போதனைகள் மட்டுமின்றி அவரின் வாழ்க்கையில் இருந்தே நமது வாழ்க்கையை செம்மையாக்க கூடிய பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இக்கால ஆண்கள் புத்தரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இந்த பதிவில் புத்தரின் வாழ்க்கை ஆண்களுக்கு உணர்த்தும் பாடங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சிந்தனைகள்
புத்தர் எப்போதுமே அனைவர்க்கும் ஒரு பிரகாசமான உதாரணமாக இருக்கிறார். புத்தர் எப்போதுமே உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள் என்று கூறுவார். அவர் சில வழிமுறைகளை பின்பற்றி அவற்றில் எது தனக்கு ஒத்துப்போகவில்லை என்று தானே கண்டுபிடித்தார். அவரின் பாதையை அவரே உருவாக்கினார். அதுதான் அவரின் வெற்றிக்கான காரணமாக அமைந்தது.

உங்கள் பிராண்டை நீங்களே மாற்றலாம்
புத்தர் இளவரசராக பிறந்தவர். அரண்மனையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அவர் துறவறத்தை மேகொண்டார். தனக்கு பின்னால் ஒரு இராஜ்ஜியமே இருந்தும் அதனை துறந்து துறவு வாழ்வில் மற்றவர்களிடம் கையேந்தினார். அவர் பரிசோதனையாளராக இருந்தார், தன் ஞானத்திற்கான பாதையை இறுதிவரை தேடிக்கொண்டே இருந்தார்.

முடிந்தவரை பயணம் செய்யுங்கள்
உலகின் பல ஆன்மீக குருக்களை போலவே புத்தரும் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அறிவை பகிர்ந்து கொள்வதில் அவர் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த காலத்தில் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று இதுவாகும்.

பரிசோதனையின் சக்தி
புத்தர் அவரின் முயற்சிகளாலேயே அடையாளம் காணப்பட்டார். உண்மையை கண்டறிய பரிசோதனைதான் சிறந்த வழி என்றும் கண்டறிந்தார். வெறுமனே மற்றவர்களிடம் இருந்து கருத்துக்களை வாங்காதீர்கள். உங்களுக்கு தேவையான உண்மைகளை நீங்களே முயற்சி செய்து கண்டறியுங்கள்.

தகுதி அறிதல்
தகுதி உள்ளவைக்கும், தகுதி அற்றவைக்கும் உள்ள வேறுபாடுகளை அறிய வேண்டும். புத்தரிடம் அனைத்துமே இருந்தது, ஆனால் அவர் செல்வத்தையும் விட உயர்ந்தது எதுவென்று உணர்ந்து அதனை தேர்ந்தெடுத்தார். அரண்மனையும் அதில் இருக்கும் செல்வமும் வரும், போகும் ஆனால் மனதில் இருக்கும் உண்மை மட்டுமே என்றும் மாறாது என்று உணர்திருந்தார் புத்தர்.

இயற்கை
புத்தர் எப்பொழுதும் இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்று உணர்ந்திருந்தார். புத்தரின் காலத்தில் மட்டுமல்ல எக்காலமும் இயற்கையுடன் இணைந்து அதனை சிதைக்காமல் வாழ்வதே முழுமையான வாழ்வாகும்.

பொறுமை
இன்றைய கால இளைஞர்களுக்கு இல்லாத ஒன்றென்றால் அது பொறுமைதான். ஆனால் புத்தரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்னவெனில் நமது இலக்குகளை அடைய பொறுமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். நமக்காக நாமே வகுத்துக்கொண்ட இலட்சியங்களை அடைய பொறுமை என்பது மிகவும் அவசியமாகும்.

மன்னிப்பு
புத்தர் எப்பொழுதும் கூறும் ஒன்று மற்றவர்களை மன்னிக்கும் பழக்கம் மற்றும் திறமையை வளர்த்து கொள்ளவேண்டும் என்பதுதான். உண்மையில் இது நமது மனநல நெருக்கடிக்கு நல்ல தீர்வை அளிக்கிறது, மற்றவரை நம் மனதிற்குள் வெறுக்கும் ஒரு குணத்தை இது மாற்றும். உங்கள் மனதை தெளிவாக்கி கொண்டு அமைதியாக வாழ பழகி கொள்ளுங்கள்.

தற்காலிகம்
புத்தர் தன் வாழ்க்கையை முன்மாதிரியாக கொண்டு வலியுறுத்துவது என்னவெனில் இந்த உலகில் அனைத்தும் தற்காலிகமானது என்பதுதான். இன்பம், துன்பம் இரண்டுமே கடந்து செல்லும் மேகங்கள்தான். இந்த தற்காலிக உணர்ச்சிகளுக்காக ஒருபோதும் நம் இலட்சியத்தை விட்டுவிடக்கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூதேவி நீயெல்லாம் தாயா! திருநாவுக்கரசின் அம்மாவை வறுத்தெடுத்த அரந்தாங்கி நிஷா!
Next articleநீங்க பிறந்த மாதத்த சொல்லுங்க! உங்க கடந்த கால, எதிர்கால காதலை பத்தி நாங்க சொல்றோம்!