இன்றைய பஞ்சாங்கம்
16-02-2019, மாசி 04, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 11.02 வரை பின்பு துவாதசி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 07.05 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 16.02.2019
மேஷம்
இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
ரிஷபம்
இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
மிதுனம்
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருள் சேரும்.
கன்னி
இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களையும் புதிய முயற்சிகளையும் சற்று தள்ளி வைப்பது நல்லது.
தனுசு
இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.
மீனம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சனை ஏற்படலாம். பெண்கள் மற்றவர்களை நம்பி பணமோ பொருளோ கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.