இன்னும் குறையுமா? தங்கத்தின் விலையில் சரிவு!

0

இன்னும் குறையுமா? தங்கத்தின் விலையில் சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையில் தினசரி ஏற்ற இறக்கம் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் சர்வதேச சந்தையிலும் வீழ்ச்சி கண்டது. அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

அதற்கமைய சென்னையிலும் ஒரு சவரன் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் 632 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று ((நவம்பர் 12)) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 3,622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் விலை 28,976 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு 24 ரூபாயும், இதே நவம்பர் 4ன் படி சவரனுக்கு 632 ரூபாயும் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையின் எதிரொலி இதே சர்வதேச சந்தையில் இதன் விலையானது செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து சரிய தொடங்கியுள்ளது. இதன் விலை நவம்பர் 4ம் தேதி 1517 டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 1456 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட 61 டாலர் கடந்த 8 நாட்களில் குறைவடைந்துள்ளது. இதே எம்.சி.எக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரை இந்த விலையானது, கடந்த செப்டம்பர் மாத உயரத்திலிருந்து சுமார் 2,019 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இதன் விலை 39,699 ரூபாயை தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா பொருளாதார கிளப்பில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க்கின் பொருளாதார கிளப்பில், இன்று பிற்பகலில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் அமெரிக்கா சீனா வர்த்தக பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் குறித்த தடயங்கள் இதில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது சாதமான தீர்வுகள் ஏற்படும் எனில், விலையில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சாதகமானால் அது தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கலாம்.

கடந்த வாரத்தில் வர்த்தக ஒப்பந்தத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியது. கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் சீனா அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, இதன் ஒரு பகுதியாக ஒருவருக்கொருவர் பொருட்களின் மீதான கட்டணங்களைத் திரும்ப பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக கூறியபோதும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அப்படி எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என மறுத்துள்ளார். இதேவேளை கடந்த பல மாதங்களாக நீடித்த வர்த்தக போரானது நிதிச் சந்தைகளை உலுக்கியதோடு, மேலும் பொருளாதார மந்த நிலைக்கான அச்சத்தையும் தூண்டியது.

இதன் காரணமாகவே விலை மதிப்பற்ற இந்த உலோகத்தினை 13 சதவிகிதம் அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சில ஆய்வாளர்கள் தங்கத்தின் விலையில், சமீபத்தில் திருமண பருவத்திற்கு முன்னதாக சில்லறை தேவையானது ஊக்கமளிக்கும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிப்புக்கு இதுவும் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாரு பாருங்க! பிகிலில் தான் அணிந்திருந்த ஜெர்ஸியை பிரபல நடிகருக்கு பரிசளித்த விஜய்!
Next articleகுவியும் வாழ்த்துக்கள்! நடிகை ரேஷ்மி மேனன் இரண்டாம் குழந்தைக்கு தாய்!