ஒரு நாளைக்கு 25 கப் காபி குடித்தால் கூட இருதயத்திற்கு எந்த கேடும் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முன்பு காபி குடிப்பது இதய நோயை வரவழைக்கும் என்று கருதப்பட்டது. இருதயத்திற்கு சுவாசக் காற்றை உட் கொண்ட ரத்தத்தை செலுத்தும் நாளங்கள் இறுக்கமடைவதாகவும் இதன் காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்படக் கூடும் என்றும் முன்பு கருதப்பட்டது.
ஆயினும் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பலமுறை காபி அருந்துகின்றனர். இந்நிலையில், 8 ஆயிரம் பேரை தேர்வு செய்து லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.
தினமும் ஒரு கப் காபி அருந்துபவர்கள், மூன்று கப் வரை அருந்துபவர்கள், பல முறை அருந்துபவர்கள் என பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, யாருடைய உடலிலும் காபி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.




