இனிமேல் இந்த மாதிரியா படுத்து தூங்காதீங்க! தூங்கினா ஆபத்தாம்!

0

மனிதர்களின் வாழ்க்கையிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி தூக்கம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

தூங்குவதில் பலருக்கு பல பிரச்சனைகள் இருக்கும். அது தூங்கும் நிலையை பொருத்தே அமைகிறது.

அப்படி ஏற்படும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் காண்போம்

முதுகு வலி மற்றும் கழுத்து வலி

பலருக்கு காலையில் தூங்கி எழுந்தவுடன் முதுகு வலி அல்லது கழுத்து வலி இருக்கும். இதற்கு முக்கிய காரணம் குப்புற வாட்டமில்லாமல் படுப்பது.

முதுகு தரையில் படும்படியும், கால்களுக்கும், முட்டிக்கும் நடுவில் மற்றும் கைப்பக்கத்தில் தலையணை வைத்து படுத்தால் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படாது.

குறட்டை

நம் அருகில் இருப்பவரோ அல்லது நாமோ குறட்டை விட்டால் கழுத்து நேராக இருக்கும் படி பெரிய தலையணையை கழுத்தருகில் வைக்கலாம்.

கால் பிடிப்பு

கால்கள் பிடிப்பு பிரச்சனை வராமல் இருக்க தூங்க போகும் முன்னர் காலை நீட்டி மடக்கி பயிற்சி செய்யலாம்.யோகா செய்வது கூட சிறந்தது.

நெஞ்சு எரிச்சல் / கால் வலி

இடது பக்கமாக திரும்பி படுத்தால் நெஞ்சு எரிச்சல் வராது. தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னதாக உணவு சாப்பிட்டிருக்க வேண்டும்.

தலையணையில் வைத்து கால்கள் உயர்த்திக் பயிற்சி செய்தால் கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைத்து வலி ஏற்படாது.

தோள்பட்டை வலி

வயிற்றை கீழே அழுத்தி படுத்தால் தூங்கி எழுந்திருக்கும் போது தோள்பட்டை வலி ஏற்படும்.
அதனால் ஒரு பக்கமாக திரும்பி படுக்கலாம்.

தூக்கம் வராமல் இருந்தால்

தூங்குவதற்கு முன்னர் செல்போன் மற்றும் கணினியை இயக்கவே கூடாது. அதே போல தூங்குவதற்கு முன்னர் மது அருந்த கூடாது. மனதில் எதையும் யோசிக்காமல் அமைதியாக வைத்திருந்தால் தூக்கம் தானாகவே வரும்.

காலையில் சரியாக எழ

தினமும் ஒரே நேரத்தில் காலையில் எழுந்து பழகினாலே அது பழக்கத்தில் வந்து விடும்.
இரவு வெகு நேரம் முழித்து விட்டு தூங்கினால் காலையில் எழ முடியாது.

தூக்கம் சம்மந்தமாக தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநெல்லிக்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleஉடல் எடையை குறைக்க டயட் பின்பற்றாமல் எடையை குறைக்க நீங்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டியவை!