இந்த 4 குணங்கள் கொண்ட நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பேரழிவு ஏற்படுவது உறுதி!

0

மாபெரும் இதிகாசமான மஹாபாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது. மகாபாரத்தில் வரும் கதாபாத்திரங்களில் அனைவரின் மதிப்பையும் பெற்றவர் கங்கையின் மைந்தரான பிதாமகர் பீஷ்மர். தான் ஏற்ற சபதத்திற்காக இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து அதனால் அழியாப்புகழ் பெற்றவர். அஸ்தினாபுரத்தின் அரியணை மீதான இவரின் விசுவாசம்தான் இவரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அனைத்து வேதங்களையும் கற்று உணர்ந்த பீஷ்மர் வாழ்க்கை நெறி மற்றும் தர்மம் பற்றிய அனைத்த்தையும் நன்கு உணர்ந்தவர் ஆவார். கௌரவர்களின் தரப்பில் இருந்து இவர் போரில் பங்கேற்றாலும் இவரின் ஆசி பாண்டவர்களுக்கு எப்போதும் இருந்தது. பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டு அம்பு படுக்கையில் படுத்திருந்த போது யுதிஷ்டிரனை அழைத்து அவனுக்கு சில வாழ்க்கை நெறிகளை தன் அனுபவத்தில் இருந்து கூறினார். அதன்படி குறிப்பிட்ட குணம் கொண்ட சிலரிடமிருந்து விலகி இருப்பதுதான் உங்கள் வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும் என்று கூறுகிறார் பீஷ்மர்.

சந்தனு மன்னனுக்கும், புனித கங்கைக்கும் எட்டாவது மகனாக பிறந்த தேவவிரதன் சிறுவயது முதலே தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். போர்க்கலைகளை பரசுராமரிடம் கற்ற தேவவிரதன் உலகம் போற்றும் மாவீரனாக விளங்கினார். தன் தந்தையின் மகிழ்ச்சிக்காக ராஜ்ஜியத்தையும், திருமண வாழக்கையையும் துறந்த தேவவிரதன் அதன்பின் பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார். அவரின் தியாகத்திற்கு பரிசாக தான் விரும்பும் நேரத்தில் மரணம் அடையும் வரத்தை பெற்றார். போரில் சிகண்டி மூலம் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் தர்மனை அழைத்து அவருக்கு விலைமதிப்பில்லாத சில அறிவுரைகளை வழங்கினார்.

சோம்பேறித்தனுடன் இருப்பவர்கள் மிகவும் மோசமான நண்பர்களாக இருப்பார்கள் என்று பீஷ்மர் கூறுகிறார். ஏனெனில் அவர்கள் தங்களின் சோம்பேறித்தனத்தை உடனிருப்பவர்களுக்கும் பரப்பிவிடுவார்கள். சோம்பேறிகளுடன் நண்பர்களாக இருப்பது உங்களை திறமையற்றவராகவும், ஒழுக்கமற்றவராகவும் மாற்றிவிடும்.

நாத்திகம் என்பது தனி விஷயம், ஆனால் நமக்கும் மேல் ஒரு சக்தி இருப்பதை மனதளவில் ஒப்புக்கொள்ளாதவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் ஒருவன் மற்றவர்களுக்கு நண்பனாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகிறான்.

சிறிய தூண்டுதலுக்கு கூட ஆக்ரோஷமாக மாறக்கூடியவர்கள் உண்மையில் மிகவும் ஆபத்தானவர்கள். தங்களின் ஆகோஷத்தால் இவர்கள் சுற்றியிருப்பவர்க்ளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவர்கள். துரியோதனின் ஆக்ரோஷம்தான் குரு வம்சத்தையே அழித்தது. அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.

பொறாமை மற்றும் வெறுப்பு குணம் கொண்டவர்கள் அனைத்து செயல்களிலும் இருக்கும் கெட்ட விஷயங்களை மட்டுமே பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நண்பர்களாக இருக்கும்போது அவர்களின் தங்களின் தீய எண்ணங்களை உங்களுக்கும் போதிப்பார்கள். இதனால் உங்களுக்கு மற்றவர்கள் மீதும், வாழ்க்கை மீதும் வெறுப்புதான் வரும். வாழ்க்கையை பற்றி பீஷ்மர் கூறுவது என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அரசன் ஒருவனுக்கு எப்பொழுதும் சில நெருங்கிய நண்பர்கள் இருக்க வேண்டுமென்று பீஷ்மர் கூறுகிறார். ஆனால் தண்ணி சுற்றியிருப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? போன்றவற்றில் அரசன் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அரசனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.

ஒரு மனிதனின் மிகச்சிறந்த நண்பன் யாரெனில் அது அவன் கடைபிடிக்கும் தர்மம் ஆகும். ஒரு வேலையை நீங்கள் முடிக்க வேண்டுமென்று விரும்பினால் உங்களின் அனைத்து முயற்சிகளையும் அந்த செயலில் காட்டவும். அதன் முடிவு என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். உங்கள் வேலைக்கு எப்பொழுதும் முதல் முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நான்கு வகையான நண்பர்கள் இருப்பார்கள். பொதுவான நண்பர்கள், குடும்ப நண்பர்கள், இயற்கையான நண்பர்கள் மற்றும் செயற்கையான நண்பர்கள்.

ஒருவன் எப்பொழுதும் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும், தன் ஆயுதத்தையும், செல்வத்தையும், நண்பனையும், நாட்டையும் பாதுகாக்க தயாராக இருக்க வேண்டும். இது இந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகும்.

ஒருவன் தன் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டிய மிகப்பெரிய தர்மம் இரக்கம் ஆகும். வேறொருவர் பிரச்சினையில் இருக்கும்போது தனக்கும் பாதிப்பு ஏற்படாமல் அவர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யவேண்டும்.

பீஷ்மரை பொறுத்தவரை நரகம் என்ற ஒன்று உள்ளது. யாரெல்லாம் வாழும் காலத்தில் நன்றியுணர்வும், மற்றவர்களை மன்னிக்கும் குணமும் இல்லாமல் வாழ்கிறார்களோ அவர்கள் இறந்தவுடன் நேரடியாக நரகத்திற்கு செல்வார்கள்.

எவனொருவன் மனதளவில் கடுமையாகவும், மென்மையாகவும் இருக்கிறானோ அவன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். எப்போது கடினமாக நடந்து கொள்ள வேண்டும், எப்போது மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நன்கு அறிந்தவன் எளிதில் வாழ்க்கையில் ஜெயித்துவிடுவான். இதற்கு சிறந்த உதாரணம் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன்தான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி!
Next articleஅதில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கியமான பயன்கள்!