இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள்! உடல் எடை சட்டென்று குறையும்!

0

முருங்கை மரத்தின் காய்களில் இருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு, சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரி செய்யலாம்.

முருங்கை விதைகள் பல வியாதிகளைக் கையாளும் தன்மையை கொண்டதாகும். இதில் ஒரு விதை பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். முருங்கை விதைகளின் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

முருங்கை விதைகளின் அற்புத நன்மைகள்

உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளை பலர் அனுபவிக்க நேரலாம். இதற்கு காரணங்கள் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு சீரற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம், ஒழுங்கற்ற உடற்பயிற்சி, பாரம்பரிய பிரச்சனை போன்றவை ஆகும்.

உயர் ரத்த அழுத்தத்தின் வெளிப்பாடுகள் மிகவும் அபாயகரமானவை என்பதால் முருங்கை விதைகள் அதனை சரிசெய்ய உதவும்.

இதய நோய்
முருங்கை விதைகளைக் கொண்டு உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதய நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

நீரிழிவு நோய்
ரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். முருங்கை விதைகள் இந்த வேலையை சரியாக செய்யும். இந்த விதைகளில் உள்ள அதிகளவு ஜிங்க், இன்சுலின் ஹார்மோன் ரத்தத்தில் சுரக்க வழிவகை செய்யும்.

உடல் எடை குறைப்பு
உடல் எடை குறைப்பில் முருங்கை விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. முருங்கை விதைகளில் உள்ள நார்ச்சத்து, ஒரு வித திருப்தியை தருவதுடன் மீண்டும் பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுகிறது.

மேலும் செரிமானத்திற்கு இது சிறந்த முறையில் உதவுகிறது. முருங்கை விதைகளில் காணப்படும் ஓலிக் அமிலம், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை எரிக்க உதவுகின்றன. இதய நோய் தாக்கத்திற்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
முருங்கை விதைகளில் அதிக அளவு வைட்டமின் சி சத்து, உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளுடன் போராடி அவற்றை வெளியில் தள்ளும். இதன்மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தலை முடி ஆரோக்கியம்
முருங்கை விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள், தலை முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் பல்வேறு நன்மைகளை முருங்கை விதைகள் கூந்தலுக்கு கொடுக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்! என்ன நடக்கும் தெரியுமா!
Next articleஅளவுக்கு அதிகமாக குடிநீர் அருந்தினால் உயிருக்கே ஆபத்தாம்! எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா!