இந்த ராசியில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அப்பாக்களிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்களாம்!
பொதுவாக பெண் குழந்தைகள் தந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். தந்தை மகளுக்கு இடையிலான பாசம் தனி வகையை சார்ந்தது, மிகவும் அழகானது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த 3 ராசிகளில் (Zodiac Sign) உள்ள பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடக ராசி (Cancer)
கடக ராசிப் (Caner) பெண்கள் தங்கள் தந்தை மற்றும் குடும்பத்திற்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஜாதகத்தின் கிரகங்கள் சரியாக இருந்தால், இந்த பெண்கள் பிறந்ததில் இருந்து, அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வச் செழிப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. தந்தைக்கு பதவி உயர்வு வரும், வருமானம் கூடும். மேலும், இந்த பெண்கள் மிகவும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து மிக இளம் வயதிலேயே பெரிய வெற்றியை அடைகிறார்கள்.
கன்னி ராசி(Virgo)
கன்னி ராசி பெண்களும் தங்கள் தந்தைக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களது திறமையால் தங்கள் தந்தை மற்றும் குடும்பத்தின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்த பெண்களுக்கு பல வித கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த துறைகளில் இவர்கள் பெயரும் புகழும் பெறுவார்கள். இவர்கள் சிறு வயது முதலே புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.
மகர ராசி (Capricorn)
மகர ராசி (Capricorn) பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், மிகவும் அன்பானவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை மிக பாசமாக கவனித்துக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள அனைவரின் மீதும், குறிப்பாக தந்தை மீது அதிக பாசம் காட்டுகிறார்கள், அன்பை பொழிகிறார்கள். இந்த பெண்களுக்கு தந்தையுடன் மிகவும் வலுவான உறவு இருக்கும்.
இந்த பெண்கள் வேலை, வியாபாரம் என இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். மகர ராசிப்பெண்கள் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் தீவிரமாக உழைப்பார்கள். இலக்கை அடைந்த பின்னரே நிம்மதி அடைகிறார்கள். இந்த குணங்கள் இவர்களை மிகவும் பிரபலமாக்குகின்றன.