இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார்களாம் தெரியுமா?

0

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார்களாம் தெரியுமா?

நல்ல மனதுடையவர்கள் எப்பொழுதும் தர்மத்தின் பக்கம் நிற்பார்கள், அவர்களுக்கு நல்லதை கெட்டதிலிருந்து பிரித்து பார்க்கும் திறமை இருக்கும். அவர்கள் எப்பொழுதும் நல்ல வழியில் செல்வார்கள் மற்றவர்களையும் அழைத்து செல்வார்கள். உங்களால் அவ்வாறு நடந்து கொள்ள இயலவில்லை என்றால் அவ்வாறு நடப்பவர்களை உங்களின் வழிகாட்டியாகதேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சிலர் பிறக்கும் போதே மனதில் தர்ம சிந்தனைகளை கொண்டு இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தர்மத்தின் வழியில் செல்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் இவ்வாறு இருக்க அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மகரம்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறந்தவராக இருக்கவும், யாரையாவது பின்பற்றவும் விரும்பினால் நீங்கள் மகர ராசிக்காரர்களை தேர்ந்தெடுக்கலாம். மகர ராசிக்காரர்கள் தைரியம், விசுவாசம், நம்பகத்தன்மை, பொறுமை என பல நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் மனக்கிளர்ச்சிக்கு ஆளாக மாட்டார்கள். எடுக்கும் எந்த முடிவையும் நன்கு சிந்தித்து எடுக்கும் இவர்கள் மற்றவர்களை பாதிக்காத வண்ணம் முடிவெடுப்பார்கள். இவர்களின் இலட்சியங்கள் எப்பொழுதும் பெரியதாக இருக்கும் அதை எப்படியும் அடைந்தும் விடுவார்கள். இவர்களை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது உங்களுக்கு நல்ல வழியை காட்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்க அனைத்து தகுதிகளும் உடையவர்கள். தைரியமும், நம்பிக்கையும் உடைய சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிக பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொறுப்புகளை தட்டி கழிப்பதோ அல்லது செய்யாமல் இருப்பதோ இவர்களுக்கு பழக்கமில்லாத ஒன்று. இவர்கள் மிகவும் வலிமையானவர்கள் ஆனால் தன்னுடைய வலிமையை மற்றவர்களை நசுக்க பயன்படுத்த மாட்டார்கள். சூழ்நிலை சாதகமில்லாத போது இவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள். அதனாலேயே இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை கூறுகிறார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் தர்மத்தின் பாதையில் வாழ்பவர்கள் அதனை அவர்களின் வாழ்க்கைமுறையே உணர்த்தும். நேர்மை, நியாயத்தின் பக்கம் நிற்பது என்று இவர்களிடம் சிறந்த குணங்கள் நிறைய இருக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் தவறான வழியில் ஒருவரை வெல்ல மாட்டார்கள். அவர்களை பற்றி அவர்கள் பெருமையாக எண்ணுவார்கள் ஆனால் அதற்காக மற்றவர்களை சிறுமைப்படுத்த மாட்டார்கள். இந்த குணத்தை இவர்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் நல்ல குணம் என்பது அவர்களை மற்றவர்கள் இவர்களை எப்படி நடத்துகிறார்களோ அப்படியே மற்றவர்களை நடத்துவதுதான். சொல்லப்போனால் தன்னை அன்பாக நடத்துபவர்களை இவர்கள் அதைவிட பலமடங்கு அதிக அன்புடன் நடத்துவார்கள். இவர்கள் மற்றவர்களை எடைபோட மாட்டார்கள் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். இவர்களை உங்களின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டால் வாழக்கையில் மற்றவர்கள் நேசிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்க காரணம் அவர்களின் பெரிய மனதுதான். இவர்களை அனைவரையும் விரும்புவார்கள் அதனை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் செய்வார்கள் . தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் நேர்மையின் பக்கம் நிற்பவர்கள் அதனால் உண்மை காயப்படுத்தினாலும் அதைத்தான் பேசுவார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து அனுபவங்களையும் பெற வேண்டும் என்று வாழ்பவர்கள். இவர்களை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் அனுபவம் அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday rasi palan – 12.08.2019 / இன்றைய ராசிப்பலன் – 12.08.2019
Next articleஇந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம் உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க?