இந்த பொருளை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களை எட்டியும் பார்க்காது! எப்படி தெரியுமா!

0

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது பயன்படும். தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது.

அத்துடன் இரும்புச்சத்து,கால்சியம்,போஸ்பேட்,க்ளோரின்,பொட்டாசியம்,மக்னீசியம்,விட்டமின், பி1,பி2,பி3 ,பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.

அதே போல இலவங்கப்பட்டையிலும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை இருக்கிறது.இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

தயாரிப்பு முறை

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை தண்ணீரில் சேர்க்கலாம் அப்டியே பேஸ்ட் செய்து சாப்பிடலாம்

இருதய நோய்

தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.

கொலஸ்ட்ரால்

ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறைந்திடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்! வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது!
Next articleஆண்களை விடப் பெண்களையே அதிகமாய் தாக்கும் தைராய்டு! ஏன் தெரியுமா!