இந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா!

0
516

ஸ்கூல், காலேஜ் கல்ச்சுரல்களில்… அலுவலகங்களில் கிறிஸ்தமஸ், நியூ இயர் கொண்டாட்டங்களில் நாம் ஆடலும், பாடலும் என கொண்டாட்டமாக இருந்திருப்போம். பல்வேறு துறைகளில் வேலை செய்து வரும் நமக்கு ஆடலும், பாடலும் ஒரு பொழுபோக்காக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஆடுவது, பாடுவது நடிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் இந்திய நடிகர், நடிகைகள் தங்கள் ஃப்ரீ டைமில் என்னவெல்லாம் செய்வார்கள். அவர்களது பொழுதுபோக்கு என்னென்னே என்று இந்த தொகுப்பில் காணலாம்.

சிம்பு!
எடுத்ததும் அவருக்கு பார்ட்டி செய்ய பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். ஆம்! சிம்புவிற்கு ஃப்ரீ டைமில் பார்ட்டி செய்ய பிடிக்கும் தான். ஆனால், அதே அளவிற்கு சிம்புவிற்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஸ்டூடியோவில் தானே எழுதிய பாடல்களுக்கு இசை அமைப்பது போன்றவையும் மிகவும் பிடிக்கும்.

தல அஜித்!
இது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். தலக்கு பிரியாணி செய்ய பிடிக்கும். இன்டீரியர் டிசைன் செய்வது பிடிக்கும். அனைத்திற்கும் மேலாக ஏரோ மாடலிங் செய்வதை தொடர்ந்து கற்றுக் கொண்டும் இருக்கிறார், கற்பித்துக் கொண்டும் இருக்கிறார். எல்லாம் தனியாக புத்தகம் வாசிக்க ரீட் ரூம் வைத்திருப்பார்கள். ஆனால், அஜித் தன் வீட்டில் தனது மெக்கானிஸம் வேலைகள் செய்வதற்காக தனி இடத்தையே ஒதுக்கி இருக்கிறார்.

த்ரிஷா!
நடிகை த்ரிஷாவிற்கும் பார்ட்டி செய்ய பிடிக்கும் தான். ஆனால், தனக்கு நெருக்கமான தோழிகளுடன் சுற்றுலா செல்வதை மிகவும் விரும்புவார் த்ரிஷா. ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் போன்ற அட்வெஞ்சர் விளையாட்டுகள் என்றால் அம்மணிக்கு மிகவும் விருப்பம். இதற்காகவே சுற்றுலாக்கள் மேற்கொள்வார் என்றால் பார்த்துக்க் கொள்ளுங்கள்.

அருண் விஜய்!
உடற்கட்டை பேணிக்காப்பதில் சமீப காலமாக மிகுந்த அக்கறை எடுத்து வருகிறார் அருண் விஜய். ஷூட்டிங் ஸ்பாட்டில் எத்தனை நேர தாமதம் ஆனாலும், உடற்பயிற்சி செய்யாமல் உறங்க செல்வதில்லை அருண் விஜய். அதிலும் சாதாரணமாக இவர் உடற்பயிற்சிகள் இவர் மேற்கொள்வதில்லை. இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீங்கள் ஃபாலோ செய்தாலோ உடற்பயிற்சியில் இவர் எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறார் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும். த்ரிஷாவை போலவே, ஸ்கை டைவிங், பாராசூட், ஸ்கூபா டைவிங் என அட்வெஞ்சர் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் இருப்பவர் அருண் விஜய்.

விக்ரம்!
சியான் விக்ரம் ஒரு நடிப்பு அரக்கன். அதே சமயத்தில் அஜித்தை போலவே புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் விகாரம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீ டைம் இருந்தாலோ, ஷூட்டிங் ஸ்பாட்டில் பேக்கப் செய்துவிட்டாலோ அல்லது தானாக வெளியே எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுப்பதை தனக்கு பிடித்தமான வழக்கமாக வைத்திருக்கிறார் சியான்.

சாயிஷா!
சமீபத்திய கோலிவுட் அழகு பதுமை சாயிஷா தான். வளைவு நெளிவான உடல்வாகுடன் அவர் ஆடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடிப்பை காட்டிலும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சாயிஷா. தனது இன்ஸ்டா முகவரியில் அவ்வபோது தான் நடன பயிற்சி மேற்கொள்வதை பதிவிட்டுக் கொண்டே இருப்பார்.

வித்யா பாலன்!
பாலிவுட் திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், தான் ஃப்ரீயாக இருக்கும் போது கவிதைகள் எழுத துவங்கிவிடுவார். இவர்களுக்கு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆரவல் உள்ளது. தான் எழுதும் கவிதைகளை தனக்கு நெருக்கமான தோழர், தோழிகளுடன் மட்டும் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் வித்யா.

ரன்பீர் கபூர்!
காதல் மன்னன் ரன்பீர் கபூருக்கு நடிப்பிற்கு அடுத்ததாக மிகவும் பிடித்தமானது கால்பந்தாட்டம். தான் ஃப்ரீயாக இருக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்தாட்டம் விளையாடுவார் ரன்பீர். அதுமட்டுமல்ல, இவருக்கு டிவிடிகளில் படங்கள் பார்ப்பது மற்றும் வீடியோ கேம் விளையாடுவதிலும் அதிக ஆர்வம் உள்ளது.

ரன்வீர் சிங்!
ஒருவரால் இப்படி எல்லாம் காதலிக்க முடியுமா? இந்த அளவிற்கு காதலை வெளிப்படுத்த முடியுமா என்று பெண்கள் ஏங்கும் கனவு கண்ணன் ரன்வீர் சிங். தனக்கு நேரம் கிடைக்கும் போது ரன்வீர் சிங் ஃப்ரீ டைமில் தனது மொபைல் போனில் ராப் பாடல்கள் தானே எழுதி பாடி ரெகார்ட் செய்து வைத்துக் கொள்கிறார். தன் மொபைல் போனில் இப்படி பல ரெக்கார்ட் செய்த பாடல்களை வைத்திருக்கிறார் ரன்வீர். சிம்புக்கு போட்டியாளராக இருப்பாரோ.

ஆலியா பட்!
Charcoal Painting என்றால் அம்மணிக்கு மிகவும் பிடிக்குமாம். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வீட்டில் தனியாகவோ, பொழுதுபோக்க நேரம் கிடைத்தாலோ உடனே Charcoal Painting செய்ய துவங்கிவிடுகிறார் ஆலியா பட்.

தியா மிர்சா!
அழகு பதுமையான தியா மிர்சா ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், புத்தகம் படிப்பது மற்றும் மண்பாண்ட பொருள்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். தனியாக யாரேனும் இவரை விட்டுவிட்டால் மண்பாண்ட பொருள் செய்ய ஆரம்பித்துவிடுவாராம். நிபுணத்துவம் பெற்றவர் என்று கூற முடியாது என்றாலும் மண்பாண்ட பொருள்கள் செய்வதில் என்னவோ அம்மணிக்கு அம்புட்டு ஆர்வம் பொங்கி வழிகிறது.

அபய் தியோல்!
இந்தி சினிமாவின் ஸ்மார்ட் நடிகராக கருதப்படும் அபய் தியோலுக்கு மர கலை வேலைப்பாடுகள் என்றால் மிகவும் பிரியம். இதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று தனியாக பயிற்சி பெற்று வந்திருக்கிறார் அபய் தியோல்.

ஸ்ரீ தேவி!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் செய்வதற்கு என்றே நிறைய ஹாபி வைத்திருந்திருக்கிறார். முக்கியமாக மகள்களை அக்கறையாக பார்த்துக் கொள்வதற்கு அடுத்ததாக, நிறைய நேரம் ஓவியம் வரைவதில் செலவிட்டு வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. Thoughts என்ற தலைப்பில் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் சர்வதேச அளவில் ஏலத்தில் விற்கப்பட்டதாக கூறப்படுகின்றன.

அக்ஷய் குமார்!
பக்ஷி ராஜனாக 2.Oவில் மிரட்டிய அக்ஷை குமாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலையில் ஆர்வம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். முக்கியமாக சீன தற்காப்பு கலையாக கருதப்படும் Tai Chiயில் பயிற்சி பெற்றவர் அக்ஷை குமார். தனக்கு நேரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை பயிற்சி செய்ய துவங்கி விடுகிறார் அக்ஷை. இதனால் மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாய் நம்புகிறார் அக்ஷை.

ஷாருக்கான்!
நடிப்பு, ஜிம்மில் பயிற்சி செய்வதை காட்டிலும் கிங் ஆப் கான் ஷாருக்கானுக்கு தொழில்நுட்ப வளர்சிகள் குறித்து அறிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். சந்தையில் எந்த ஒரு கருவி புதியதாக அறிமுகம் ஆனாலும் அதை உடனே வாங்கி வந்துவிடுவார். முக்கியமாக வீடியோ கேம்ஸ் மற்றும் Gadgets என்றால் ஷாருக் உடனே வாங்கிவிடுவார்.

கங்கனா ரனாவத்!
நமக்கு எப்படி நயன்தாராவோ அப்படி தான் பாலிவுட்க்கு கங்கனா ரனாவத். நயனுக்கு முன்னோடி கங்கனா. இளம் வயதில் இருந்தே சமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர் கங்கனா. கங்கனாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு அவர் எத்தனை சிறந்த குக் என்பது தெரியும். தல அஜித்தை போல, ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சேர்த்து சமைக்க கூறினாலும் இந்த மணிகர்ணிகா அசராமல் சமைப்பார்.

சல்மான் கான்!
சல்மான் கான் என்றாலே நடிப்பை காட்டிலும் பாடிபில்டிங் செய்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் தான் முந்திக் கொண்டு வந்து நிற்கும். சில சமயம் சிக்ஸ் பேக் வைக்க முடியாவிட்டாலும் வி.எப்.எக்ஸ் செய்தாவது சிக்ஸ் பேக் வைத்துக் கொள்வது சல்மான் கானின் பழக்கம். இந்த 50+ விர்ஜின் பாய்க்கு ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். அதே போல, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயலாதோருக்கு நன்கொடை அளிப்பதும் மனதார செய்வார்.

Previous articleபாராளுமன்றத்தில் ஐசக் நியூட்டன் பேசிய அந்த ஒரு வார்த்தை!
Next articleஉங்களுக்கு 100% செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது! இந்த 10 விஷயம் இருந்தா போதும்!