Home Patti Vaithiyam இந்த ஒரு டீ 2 கிலோ எடையைக் கிடு கிடுனு குறைச்சிடும்! எப்படி தெரியுமா! இரண்டு...

இந்த ஒரு டீ 2 கிலோ எடையைக் கிடு கிடுனு குறைச்சிடும்! எப்படி தெரியுமா! இரண்டு நாளில் அதிரடி மாற்றம்!

0
544

உலகில் ஒவ்வொரு வருடமும் உடல் பருமனால் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதில் குழந்தைகள், இளம் வயதினர் தான் உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு உண்ணும் உணவுகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

ஒருவர் உண்ணும் உணவுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலே, உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.

அது என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒருவர் தன் அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

உங்களுக்கு டீ டயட் பற்றி தெரியுமா? அதிலும் க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம் என்பது தெரியுமா? இதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்த டீ டயட் மூலம் ஒரே நாளில் 1/2 கிலோவில் இருந்து 2 கிலோ வரை உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இந்த டீ டயட்டை மாதத்திற்கு 2 நாட்களுக்கு மேல் பின்பற்றக்கூடாது.

டீ செய்ய தேவையான பொருட்கள்

பாதாம் பால் – 1.5 லிட்டர்

க்ரீன் டீ பொடி – 2 டேபிள் ஸ்பூன்

தேன் – சிறிது

இந்த ரெசிபிக்கு க்ரீன் டீ பையை வாங்கலாம் என்று நினைக்க வேண்டாம். க்ரீன் டீ பொடியை வாங்கிப் பயன்படுத்துங்கள். அது தான் நல்ல பலனைத் தரும்.

செய்யும் முறை
முதலில் பாதாம் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் க்ரீன் டீ பொடியை சேர்க்க வேண்டும்.

பின் அதை மூடி வைத்து 20 நிமிடம் கழித்து, வடிகட்டி தேன் சிறிது கலந்தால், டீ தயார்.
எப்போது பருக வேண்டும்?

இந்த டீயை 2 மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் என நாள் முழுவதும் பருக வேண்டும்.

இதனால் அடிக்கடி பசி ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டுவதோடு, க்ரீன் டீ பாதாம் பாலை எளிதில் செரிமானமடையச் செய்யும்.

பருகக்கூடாதவர்கள்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை, சிறுநீரகம் அல்லது பித்தப்பை நோய்கள், குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க இந்த டயட்டைப் பின்பற்றக்கூடாது. மேலும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இந்த டயட்டைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

Previous articleஇந்த இலையின் ஒரு துளி சாறு டெங்குவையும் ஓட ஓட விரட்டுமாம்! இலங்கை ஆய்வில் வெளிவந்த தகவல்!
Next articleஅக்கா நீங்க இப்படி செய்யலாமா! சர்ச்சையில் சிக்கிய அரந்தாங்கி நிஷா!