இந்த எண்ணெயை பயன்படுத்தினால் கருவளையங்களை நீக்கி விடலாம்!

0
1521

மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அதனை போக்க அதிக செலவு செய்யவோ, மெனக்கெடவோ வேண்டியதில்லை.

ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தியே கருவளையங்களை போக்கி விடலாம். இது சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு தேக நலனில் பங்கு கொள்கிறது. தோலில் படிந்திருக்கும் அசுத்தங்கள், அழுக்கை நீக்கி சருமம் தூய்மையாகவும், புதியதாகவும் ஜொலிக்க துணைபுரிகிறது.

கருவளைய பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில துளிகள் ஆமணக்கு எண்ணெய்யை கண்களுக்கு அடியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக இரவு தூங்க செல்லும் முன்பு கண்களையொட்டி தேய்த்துவிட்டு, காலையில் முகத்தை கழுவுவது நல்ல பலனை கொடுக்கும். ஆமணக்கு எண்ணெயுடன் பால் கலந்தும் பயன்படுத்தலாம்.

இரண்டையும் சில துளிகள் கலந்துவிட்டு, கண்களின் அடிப்பரப்பில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து தேய்த்து வந்தால் விரைவில் கருவளைய பிரச்சினை தீர்ந்துவிடும்.

ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்தும் தேய்த்து வரலாம். இரண்டு எண்ணெய்களையும் கண்களுக்கு அடிப்பரப்பில் தடவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். காலையில் கழுவுங்கள். இதேபோல் பாதாம் எண்ணெயுடன், ஆமணக்கு எண்ணெயை சேர்த்தும் பயன்படுத்தலாம்.

Previous articleஇந்த 9 விதிகளை பின்பற்றினால் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
Next articleமுகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கி பளபளப்பாக்கும் சமையல் சோடா!