இந்த இலைகளை கொதிக்க வைத்து பயன்படுத்தவும்! நன்மைகள் ஏராளம்!

0

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை போன்றே மா இலைகளிலும் சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதில் விட்டமின்கள் ஏ, சி, பி, இ அடங்கியுள்ளன, இதுதவிர அசிடேட், அல்கலாய்டு, டேனின், இரும்புசத்து மற்றும் மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு
முதல் நாள் இரவு மாவிலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள், அதனை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி கொதிக்க வைக்கவும்.

பத்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் இரவு முழுவதும் அதே தண்ணீரில் ஊறவைக்கவும், மறுநாள் காலை மாவிலைகளை எடுத்துவிட்டு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இது சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்கிறது.

வாதப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு
வாதப் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள், இளம் மாவிலைகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடான நீரை ஊற்றவேண்டும், இரண்டு மணிநேரம் கழித்து தண்ணீரின் நிறம் மாறியதும் குடிக்கவும், தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு
சின்ன வெங்காயச்சாறு மூன்று டீஸ்பூன், ஒரு கைப்பிடியளவு மாவிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியளவு வந்ததும் அருந்தவும்.

இதர பயன்கள்,
மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

மாவிலைகளை நிழலில் உளர்த்தி காயவைத்து பின் அதனை அரைத்து பவுடராகவும் பயன்படுத்தலாம், சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது தீர்வாகும்.

தினமும் மாவிலை நீர் குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

மாவிலை நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள தொற்று, கிருமி, பக்டீரியா நீங்கிவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுட்டை குறித்து ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு!
Next articleஅடேங்கப்பா! இந்த சிறிய ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ பலன்களா!