இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பல தீவுகளை கொண்ட இந்தோனேசியாவில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதனால் அப்பகுதியில் பல கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செத்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் சமீபத்தில் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 555 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




