இத படிங்க அப்புறம் குளிங்க! காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?
நீங்கள் காலையில் எழுந்ததும் பல் துலக்கி குளிப்பவரா அல்லது மாலையில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளவரா அல்லது இரவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கும் பழக்கம் உள்ளவரா உங்களது குளிப்பு முறைமையால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளை நீங்கள் அறிவீர்களா? இதோ தெரிந்து கொள்வோம்.
நீங்கள் மாலையில் குளிக்கும் போது இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வரும். இதனையே பில் ஃபிஷ் என்ற தூக்க விஞ்ஞான பயிற்சியாளர் டக்.காம் என்ற இணையதளத்தில் “தூக்க கண்ணோட்டத்தின் வகையில் பார்த்தால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது நல்லது. ஏனெனில் இது உடலுக்கு ஒரு வித புந்துணர்வை கொடுக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை” என்று கூறுகிறார். இந்த ஆராய்ச்சியின் பிரகாரம் இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடல் வெப்ப நிலையை ஓரளவு சீராக்கி நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும் என்பதனால் தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்னர் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. இங்கு “இன்ஸோமினியா போன்ற தொந்தரவு உடையவர்கள் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் குளிப்பது நல்லது. எது எவ்வாறாயினும் மாலையில் குளிக்கும் போது உடல் வெப்பநிலையை சீராக்கப்பபட்டு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.
மறுபுறம் காலையில் எழுந்ததும் குளிக்கும் போது நீர் நமது உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது என்று மனநல மருத்துவர் டாக்டர் டாமியன் ஜேக்கப் செட்லெர் மின்னஞ்சல் வழியாக தன் கருத்துக்களை தெரிவிக்கிறார்.
இவ்வாறாக உங்கள் தூக்க பிரச்சினைக்கு இரவு நேர குளியல் என்பது மிகச் சிறந்த தீர்வாக உள்ள அதேநேரம் காலையில் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நீங்கள் காலையில் குளிப்பது பொருததமானதாக அமையும்.
உங்கள் கூந்தலின் தன்மையை பொருத்து கூட நீங்கள் குளியலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எண்ணெய் பசை உடைய கூந்தல் உடையவர்களுக்கு காலையில் குளிப்பதன் மூலம் உங்கள் கூந்தலை களையிழக்காமல் வைத்திருக்க உதவுவதுடன், அடர்ந்த கூந்தல் உடையவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குளித்து கொள்ளலாம். குறிப்பாக இரவு நேர குளியலுக்கு பின்னர் கூந்தலை உலர வைக்கும் கருவிகளை பயன்படுத்தல் மற்றும் வாரத்திற்கு ஒரு தடவைக்கு மேல் சாம்பு பயன்படுத்தல் என்பனவற்றைத் தவிர்த்தல் நல்லது.
இதனைவிட, காலையில் குளிப்பதற்கும் மாலையில் குளிப்பதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என சரும நிபுணர்கள் கூறுகின்றார்கள். ஏனெனில் இந்த குளியல்களால் சருமத்தில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றபோதிலும், நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஆழ்ந்த உறக்கம் ஏற்பட அது உதவுகின்றதனால், இந்த நல்ல தூக்கம் உங்கள் சருமத்திற்கு நல்ல பலனைத்தரும்.
இரவு நேர குளியல் செய்வோர் குளித்ததும் உங்கள் கூந்தலை நன்றாக காய வைக்கவில்லையெனில் அது மைக்ரோபஸ்களை உண்டாக்கி பொடுகுத் தொல்லையை ஏற்படுத்தி விடும். எனவே உங்களுக்கு எண்ணெய் பசை கூந்தல் இருந்தால் காலையில் குளிப்பது நல்லது.
நாள் முழுவதும் வேலை பார்த்த களைப்பு மற்றும் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்குதல்;, அவ்வாறே படுக்கைக்கு செல்வதை அசௌகரியமாக உணர்தல் என்பனவற்றினால் படுக்கைக்கு முன் குளிப்பதனையும், காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்து விட்டு வியர்வை நீங்க குளிப்பது காலையில் குளிப்பதும் நல்லது. இது நமக்கு நாள் முழுவதும் ஒரு சௌகரியத்தை ஏற்படுத்தும்.
ஆஸ்துமா மற்றும் அழற்சி உடையவர்கள் மாலை நேர குளியல் தவிர்ப்பது நல்லது என்பதுடன், ஏனையோர் காலை மாலை எப்பொழுது வேண்டும் என்றாலும் குளித்து கொள்ளலாம்.
By: Tamilpiththan