இத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்!

0
536

தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்தவர் கௌசல்யா. பெங்களூரை சேர்ந்த இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் சினிமாவிற்கு வந்தார்.

தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன. பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.

38 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துவிட்டாராம். இவரின் குடும்பத்தில் வரன் பார்க்க தொடங்கிவிட்டார்களாம். விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்.

Previous articleகணவர் கண்முன்னே பலியான தாய், மகள்: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!
Next articleசி.சி.டிவியில் சிக்கிய ஆதாரம்! தீயாய் பரவும் தந்திரக்காட்சி!