சிலருக்கு தேவையற்ற முடிகள் கை, கால் மற்றும் முகத்தில் உருவாகும். இவற்றை தடுக்கவே நம் முன்னோர்கள் சிறுவயதிலிருந்து மஞ்சள், பயற்றம் மாவு போன்றவற்றை உபயோகித்தார்கள். நாம் அவற்றை நிறுத்திவிடுவதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கிறது. வேக்சிங் என்ற பெயரில் மாதம் ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கிறது.தொடர்ந்து முடியை நீக்குவது வளர்ச்சியை தூண்டுமே தவிர குறைக்காது. இங்கு உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் பற்றி பார்க்கலாம்.