இது தெரிந்தால் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோலை போடவே மாட்டீங்க? இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்கலாம்.

0

நீங்கள் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோல் பல அற்புதங்களை செய்யக்கூடியது.வெங்காயத்தின் தோல் உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது. வெங்காயத் தோலின் நன்மைகள்.

இரவில் பருகலாம்.

கொதிக்கும் நீரில் வெங்காய தோல்களை போட்டு அடிக்கடி பருகி வந்தால், எல்.டி.எல் கொழுப்பு குறைகிறது. இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் இதனுடன் தேன் கலந்து பருகலாம்.

இந்த வெங்காய டீயை இரவு படுக்கைக்கு போவதற்கு முன்னர் பருகலாம். இதில் அடங்கியுள்ள நார்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கார்டிவாஸ்குலர் இருதய நோய் வரமால் தடுக்கிறது.

வெங்காயத் தோலில் உள்ள சத்துக்கள்

வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக உள்ளது.

வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

நன்மைகள்

வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.

வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சக்தி வாய்ந்த சத்துக்கள் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள், கொலஸ்ராலைக் கரைத்து, உடல் பருமன் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெங்காயத் தோலை எப்படி உட்கொள்ளலாம்?

வெங்காயத் தோலை டீ செய்து குடிக்கலாம். முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாம் தினம் தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் இத்தனை நன்மைகளா? இப்படி பயன்படுத்துங்க!
Next articleகுடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா!