தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.
பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார்.
இந்நிலையில், இந்த வரிசையில், நேற்று இயக்குனர் முருகதாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது, அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, இந்த சர்ச்சை பேச்சுகளே தீராமம் இருக்கும் நிலையில், தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி பெரிய வெடிகுண்டை போட்டுள்ளார். இதை பார்த்து தமிழ் சினிமா உலகம் அதிர்ந்துள்ளது.
5 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் பார்க் ஓட்டலில் நடந்த செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் பார்ட்டியில் என்னை சந்தித்தது ஞாபகம் உள்ளதா? நீங்கள் என்னை பயன்படுத்தினீர்கள். இருவரும் கிளப்பில் நடனமாடியபோது எனக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி அளித்தது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டிருந்தார்.
மேலும், என் வாழ்க்கையில் நடந்த ரகசியங்களை நான் பகிர்ந்தபோது எனக்கு ஆறுதலாக, ஆதரவாக மற்றும் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. இது தமிழ் திரையுலகிற்கான நேரம்.” என்று அதிரடியாய் முடித்துள்ளார்