இதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்!

0
618

நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் தான் நமது வாழ்க்கையை மோசமான நிலைக்கு தள்ளி விடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் தினமும் உணவாக சாப்பிடும் பொருட்கள் வரை இந்த பாதிப்புகள் உள்ளது. சில வகையான உணவு பொருட்களை நாம் வீட்டில் வைக்காமல் இருப்பதே நல்லது. அவை இருப்பதால் பல வித பாதிப்புகள் நமது உடலுக்கு உண்டாகும் என ஆய்வுகள் சொல்கின்றன.

சில வகையான உணவுகள் பேராபத்தை உண்டாக்குகின்றன. சில வகையான உணவுகள் ஆக்ரோஷமான நிலையை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நேரடியாக நமது உடலை பாதிக்க கூடிய உணவு பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதனை முழுவதுமாக அகற்றுவதே சிறந்தது. இனி உங்களின் வீடுகளில் இருக்க கூடிய ஆபாயகரமான உணவு பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

நரம்பு மண்டலம்
மனித உடலின் மிக முக்கிய பங்கு நரம்புகளுக்கு உண்டு. நரம்புகள் பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு உறுப்புகளும் தனது செயல்பாட்டை இழக்க நேரிடும். இது நாளடைவில் மரணத்தை தான் பரிசாக நமக்கு கொடுக்கும். இந்த நிலையை ஏற்படுத்துவது நமது வீட்டில் உள்ள உணவு பொருட்களும், சூழலும் தான்.

காபி பொடி
பொதுவாக காபி குடிப்பது நல்லது என்றே கூறுவார்கள். இது முழுக்க முழுக்க உண்மை தான். எனினும், காபியில் நாம் சேர்க்கும் சர்க்கரை தான் காபியின் தன்மையை மோசமானதாக மாற்றுகிறது. சர்க்கரை சேர்ப்பதால் கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இது தான் உங்களின் அடக்க முடியாத கோபத்திற்கு மூல காரணம்.

சாஸ்
உணவுகளில் சேர்க்கப்படும் சாஸ்கள் கூட நம்மை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும்.முக்கியம்க்கா சோயா சாஸ் போன்றவற்றை சொல்லலாம். இவற்றில் சோடியம் லாடன் என்கிற வேதி பொருளை அதிக அளவில் சேர்ப்பதால் இதன் ஆபத்து அதிகம்.

அடைக்கப்பட்ட ஜுஸ்கள்
செயற்கை சர்க்கரை, நிறமூட்டிகள் சேர்த்த பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜுஸ்களை குடித்து வந்தால் நமது உடல் நலத்தை நேரடியாக பாதிக்கும். முக்கியமாக இதனால் கேடுகள் தான் உடலுக்கு கிடைக்கும். கூடவே ஹார்மோன் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும்.

உப்பு
நம் அனைவருக்கும் இது நன்கு தெரிந்தது தான். உணவில் அதிக அளவு உப்பு சேர்த்தால் அது நமது உடல் நலத்தை முற்றிலுமாக பாதிக்கும். முதலில் இது ஹார்மோன் உற்பத்தியை தான் பாதிக்கும். அதன் பின் மன அழுத்தம், மன கஷ்டம், கோபம், மன வருத்தம் போன்ற பலவித மன ரீதியான பிரச்சினைகளை உண்டாகுமாம்.

டயட் சோடா
பலர் செய்கின்ற தவறுகளில் இதுவும் ஒன்று. சாப்பிட்ட உணவு மிக விரைவிலே செரிக்க வேண்டும் என்பதற்காகவும், டயட் சோடா போன்றவற்றை குடிப்பது தான். ஆனால், இதில் Aspartame என்கிற மிக மோசமான இனிப்பூட்டி சேர்க்கப்படுவதால் இது நரம்பு பகுதியை பாதிக்கும். பிறகு உங்களின் மன நிலையை பாதிக்கும்.

கேன் சூப்ஸ்
Bisphenol A என்கிற வேதி பொருள் இந்த வகையான கேன்னில் அடைக்கப்பட்ட சூப்களில் விற்கப்படுவதால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மிக விரைவிலே மன ரீதியான பல பிரச்சினைகள் உண்டாகும். உடல் பருமன் கூட இதனால் ஏற்படலாம்.

வறுத்த பொரித்த உணவுகள்
பெரும்பாலும் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது நேரடியாக நமக்கு ஆபத்தை உண்டாக்க கூடியவை. கார்டிசோல் ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்து கோபம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குமாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
வீடுகளில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒரு போதும் வாங்கி வைக்காதீர்கள். இந்த வகையான உணவுகள் நமது ஆரோக்கியத்தை பாதித்து மிக விரைவிலே உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

Previous articleதம்மாதுண்டு தக்காளி விதையால தான் இத்தன நோய் நமக்கு வருதாம்! அப்போ எப்படி சாப்பிடலாம்!
Next articleநீங்க எவ்ளோ ஆசைப்படறீங்களோ அவ்ளோ எடையை குறைக்கும் 5 அதிசய பழங்கள்! தினம் சாப்பிடுங்க!