தைம் எனும் மருத்துவ மூலிகையில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் ஆகியவை நிறைந்துள்ளது, இந்த தைம் மூலிகையை டீ வடிவில் தினமும் குடித்து வந்தால் பல மருத்துவ பண்புகளை பெறலாம்.
தேவையான பொருட்கள்
உலர்ந்த தைம் மூலிகை – 1 கையளவு
தண்ணீர் – 1 கப்
தேன் – சுவைக்கேற்ப
தயாரிப்பது எப்படி?
முதலில் தைம் மூலிகையை நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.
உட்கொள்ளும் முறை
தினமும் தைம் டீயைக் குடிக்கலாம். அதிலும் காலையில் தைம் டீ குடித்து வந்தால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
தைம் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தைம் டீயில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்கி, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
ரத்தச் சோகை உள்ளவர்கள் தைம் டீ குடித்தால், நம் உடலில் சிவப்பு ரத்த செல்களின் உருவாக்கம் அதிகரித்து, ரத்த சோகை விரைவில் நீங்கும்.
அடிக்கடி சளி அல்லது ஜலதோஷம், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் தைம் டீ குடித்தால் நல்ல பலனை பெறலாம்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தைம் டீ குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்கி, தைராய்டு குறைபாட்டை தடுக்கிறது.
தைம் டீ குடிக்கும் போது, அது எலும்பு தொடர்பு பிரச்சனைகளான முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விரைவில் விடுபட உதவுகிறது.
தொண்டைப்புண் இருக்கும் போது, தைம் டீ குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணம் தொண்டைப்புண்ணை விரைவில் சரியாக்க உதவுகிறது.




