வெங்காயத்தில் 2 வகைகள் உள்ளது. அவை வெள்ளை மற்றும் சிவப்பு ஆகும். இவற்றில் சிவப்பு வெங்காயம் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.
இந்த சிவப்பு வெங்காயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், விட்டமின் C, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
தேவையான பொருட்கள்
சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ
தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 350 கிராம்
எலுமிச்சை – 2
தண்ணீர் – 6 டம்ளர்
செய்முறை
நாட்டுச்சர்க்கரை உருக வைத்து, அதில் நறுக்கிய சிவப்பு வெங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின் இறக்கி குளிர வைத்து அதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
உட்கொள்ளும் முறை
ஆஸ்துமா பெரியவர்களுக்கு இருந்தால், அவர்கள் ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனில், 1 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவ்வாறு ஆஸ்துமாவின் அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.