ஒரு பேக்கரி கடை அல்லது ஒரு புகழ்பெற்ற உணவகத்தை தாண்டிச் செல்லும் போது உங்களை அதாவது உங்களின் நாவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இது மிகவும் கடினமானதுதான். எனினும் நமக்கு வேறு வழி இல்லை. ஏனெனில் கஷ்டப்படாமல் நமக்கு நன்மைகள் கிடைப்பதில்லை. உங்களின் நாவை நீங்கள் அடக்கி ஆளத் தொடங்கினால், அதன் காரணமாக உங்களுக்கு நீண்ட கால நோக்கில் பல நன்மைகள் கிடைக்கும்.
உங்களுக்கு உதவும் நோக்கில் உங்களின் நாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அராய்ந்து அதற்கான வழிமுறைகளைப் பட்டியலிட்டுள்ளோம். இது சற்று சிரமனானதுதான். எனினும் இதை ஒரு சவாலாக ஏற்று உங்களின் ஆரோக்கியத்தை பேணிக்காத்திடுங்கள்.
பசியை தூண்டும் உணவுகளை தவிருங்கள் :
ஆரோக்கியமற்ற உணவு உங்களின் பசியைத் தூண்டுகிறது எனில் அதற்கு மாற்றாக ஒரு ஆரோக்கியமான உணவை கண்டுபிடியுங்கள். இந்த புதிய உணவு உங்களின் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதிக்காது. உங்களுக்கு இதை வேறு வார்த்தைகளால் விளக்க வேண்டும் எனில், உங்களின் காதல் தோல்வியை மறக்க உங்களின் புதிய நண்பர்களிடம் மிகவும் சகஜமாகப் பழகி புதிய வாழ்க்கையை மீட்டெடுப்பீர்கள் அல்லவா? இதுவும் அதைப் போன்றது.
நாவடக்கம் செய்து பாருங்கள் :
உங்களுக்கு மிக பிடித்தமான ஆரோக்கியமற்ற உணவை ஒரு டிபன் பாக்ஸில் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று, அதை உண்ணாமல் அப்படியே வைத்திருக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் நாவை அடக்கி ஆளும் ஆற்றல் உங்களின் மனதிற்கு கிடைக்கும். உணவை பாழாக்குவதன் மூலம் பணம் விரையமாகலாம். எனினும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஏனெனில் உங்களின் ஆரோக்கியம் பாழாகும் பொழுது அதற்கு அதிகப் பணம செலவு செய்ய நேரிடும்.
உலர் பழம் மற்றும் கொட்டைகள்:
உங்களூக்கு ஒரு வாய் நிறைய பர்கர் தின்னவேண்டும் எனத் தோன்றினால் அதைப் புறந்தள்ளி விட்டு, அதற்கு பதில் இரண்டு டம்ளார் தண்ணீர் மற்றும் ஒரு கை நிறைய உலர் கொட்டைகளை (20 வேர்கடலை, 10 பாதாம் மற்றும் சில ஏழு அக்ரூட் பருப்புகள்) எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களின் பசியை அடக்குவதுடன் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சாக்லேட்டிற்கு பதில் ஒரு குவளை காபி:
உங்களுக்கு ஒரு சாக்லேட் சாப்பிட த் தோன்றினால் அதற்கு பதில் ஒரு குவளை காபி அருந்துங்கள். இதற்கு காபி உடலுக்கு நல்லது என அர்த்தம் கிடையாது. ஒரு சாக்லேட் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் கலோரிகளை விட காபியில் இருக்கும் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும் காபி அருந்துவதால் உங்களின் வயிறு முழுவதுமாக நிறைந்து விடும்லு. அதன் பிறகு உங்களுக்கு எதையும் சாப்பிடத் தோன்றாது.
ஸ்பகெட்டி உங்களை அழைக்கின்றதா? பதில் அளிக்காதீர்கள்:
நீங்கள் உணவகத்தை கடந்து செல்லும் பொழுது உங்களை அந்த உணவகத்தில் உள்ள ஸ்பகெட்டி அழைக்கின்றதா? தயவு செய்து பதில் அளிக்காமல் சென்று விடுங்கள். உங்களை மனம் தூண்டும். ஏனெனில் நீங்கள் மிகவும் களைப்படைந்து இருப்பீர்கள்.ஆகவே அதைச் சாக்கிட்டு உங்களின் மனம் உங்களை இழுக்கும்.
அப்பொழுது சிறிது அறிவுக்கு வேலை கொடுங்கள். ஏனெனில் ஸ்பகெட்டி உங்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. மனதை கட்டுப்படுத்தி வீட்டிற்கு சென்று முழு தானிய உணவான ஓட்ஸ், க்யூனியா, கோதுமை பாஸ்தா, மற்றும் வாழைப்பழம் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
துன்பத்திற்குரிய பசி தூண்டிலை வென்றிடுங்கள்:
ஊட்டச் சத்து அதிகமுள்ள கீரைகளின் சாறு தைலோகோய்ட் என அழைக்கப்படுகின்றது. இது அதிக ஆற்றலை வழங்கி பசியை 95 சதவீதம் வரை கட்டுப்படுத்துகின்றது. எனவே இதை உட்கொள்வதன் மூலம் , உங்களை சிக்க வைக்கும் பசித் தூண்டிலிருந்து தப்பிக்கலாம்.
ஆறுதல் தரும் உணவுகளை தொடாதீர்கள் :
சில நேரங்களில்அதிக வேலை அல்லது அழுத்தத்தால் நமக்கு பிடித்தமான உணவை சாப்பிட்டு ஆறுதல் அடைவோம். இத்தகைய வழக்கத்தை இனிமேலும் தொடர வேண்டாம். ஏனெனில் உங்களின் மனதிற்கு சிறிது ஆறுதல் அளிக்கும் உணவானது, உங்களின் உடலுக்கு பெரும் தீங்காய் அமையும். எதையும் அறிவுப்பூர்வமாக அனுகுவதே மிகவும் சிறந்தது.




