இந்த‌ விதையை அரைத்து பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர ஆண்மை பலம் அதிகரிக்கும் உடல் சூடு தணியும்!

0

நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மாகமூலிகை என, அழைத்தனர்.

இயற்கையாக கிடைத்த மூலிகைகளைக் கொண்டு, பல நோய்களை குணப்படுத்தி வந்த சித்தர்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் தரும், கற்ப மூலிகைகளைப் பற்றியும் கூறியுள்ளனர். அதில், நத்தைச் சூரி மிக முக்கியமான மூலிகையாக உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளன. அதனால், சித்த மருத்துவத்தில், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்கும் மருந்தாக இதை பயன்படுத்தியுள்ளனர்.

மருத்துவ குணம்
இது, பூண்டு வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதன் விதை, வேர், மருத்துவக் குணம் உடையது. இதனை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

உடல் சூடு தணிக்கும்
நத்தை சூரியின் விதையை, லேசாக வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நத்தைச்சூரியின் விதையை பொடித்து, தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் போக்கும்.

உடல்பருமன் குறையும்
நத்தைச் சூரியின் விதைகளை, சட்டியில் போட்டு, பொன் வறுவலாக வறுத்து, பொடி செய்து, நீரில் கலந்து சுண்டவைத்து, அத்துடன், ஒரு டம்ளர் பசும்பால் கலந்து, இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால், உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

தாய்ப்பால் அதிகரிக்கும்
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும். 10 கிராம் நத்தை சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும்.

ஆண்மை பலம் அதிகரிக்கும்
இதன் வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது. உடலைத் தேற்றவும், விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது. நத்தைச் சூரி விதையை அரைத்து, நெல்லிக்காயளவு எடுத்து, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, 2 வேளை சாப்பிட்டு வர, உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிட்டுவர கால் வலி மூட்டுவலி ஓடிவிடும்!
Next articleஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!