பலவித எண்ணெய்களை நாம் கேள்வி பட்டிருப்போம். சமையலுக்கு தனி எண்ணெய், உடல் வலிகளுக்கு தனி எண்ணெய், தலைக்கு தடவ வேறு சில எண்ணெய்கள் என பல்வேறு வகையான எண்ணெய்கள் உள்ளன. ஏராளமான எண்ணெய் வகைகள் இருந்தாலும் ஒரு சில எண்ணெய் வகைகள் மட்டுமே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றே இந்த இஞ்சி எண்ணெய்யும் மருத்துவ குணம் கொண்டது. இதனை நாம் பயன்படுத்தி பல வித உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலும். இதுவரை வெறும் இஞ்சியை வைத்து நாம் செய்ய கூடிய விஷயங்களை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், இனி இஞ்சி எண்ணெய்யை வைத்து கூட எண்ணற்ற நோய்களுக்கும், குறைபாட்டிற்கும் நம்மால் தீர்வு காண இயலும். இது எப்படி சாத்தியம் ஆகும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.
இஞ்சி எண்ணெய்
எப்படி மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதே போன்று இஞ்சியில் இருந்தும் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம். உள் உறுப்பில் ஏற்பட கூடிய பாதிப்புகள் மற்றும் வெளி உறுப்பில் ஏற்பட கூடிய வலிகள் முதலிய அனைத்திற்கும் இது தீர்வாக இருக்கும்.
செரிமான கோளாறு
எதை சாப்பிட்டாலும் செரிமான கோளாறு ஏற்படுகிறதா? இதை தீர்க்க வழியே இல்லையா என புலம்பும் உங்களுக்காகவே உள்ளது இஞ்சி எண்ணெய். வெது வெதுப்பான நீரில் சிறு துளி இஞ்சி எண்ணெய்யை கலந்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் பறந்து விடும். மேலும், வயிற்றில் உள்ள அழுக்குகளும் வெளியேறி விடும்.
சுவாச கோளாறுகளுக்கு
உயிர் வாழ மிக முக்கியமானது இந்த சுவாசம் தான். சுவாசத்திலே பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை சரி இஞ்சி எண்ணெய் போதும். ஒரு பாத்திரத்தில் சுடு நீரை எடுத்து கொண்டு அதில் சிறிது இஞ்சி எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடித்தால் சுவாச கோளாறுகள் பறந்து போய் விடும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
உறுப்புகளில் மிக பெரிய உறுப்பான கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அது ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாகும். கல்லீரலில் உள்ள அழுக்குகள் வெளியேறவும், சீராக வேலை செய்யவும், கொழுப்புகளை நீக்கவும் இஞ்சி எண்ணெய் வழி செய்கிறது. அத்துடன் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.
புற்றுநோய் அபாயம்
இஞ்சியில் இயற்கையாகவே புற்றுநோயை அபாயத்தை தடுக்கும் ஆற்றல் உள்ளது. அதே போன்று தான் இஞ்சி எண்ணெய்யிலும் இந்த வகையான தாக்கம் அதிக அளவிலே உள்ளது கணைய புற்றுநோய், குடல் வகை புற்றுநோய், தோல் புற்றுநோய் முதலியவற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும் தன்மை இந்த எண்ணெய்யிற்கு உள்ளது.
இரத்த ஓட்டம்
சீனர்கள் ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கு இஞ்சி எண்ணெய்யை தான் பயன்படுத்துவார்களாம். இந்த எண்ணெய் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும் பார்த்து கொள்ளும்.
ஆண்மை குறைவு
இன்று ஆண்கள் கவலைப்பட்டு அவதிப்படும் ஒரு பிரச்சினை ஆண்மை குறைபாடு தான். ஆனால், இந்த குறைபாட்டை குணப்படுத்த இஞ்சி எண்ணெய் போதும். உங்களின் பிறப்புறுப்பில் இஞ்சி எண்ணெய்யை கொண்டு மசாஜ் கொடுத்து வந்தாலே இதற்கான தீர்வை எளிதில் பெற்று விடலாம்.
உடல் வலிகளுக்கு
பண்டைய கால மருத்துவத்தில் இஞ்சி எண்ணெய் மிக முக்கிய பங்கு வகித்தது. இந்த எண்ணெய்யை தடவி வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் அனைத்திற்கும் தீர்வை கண்டு விடலாம். மேலும், மூட்டு பிரச்சினை, மூட்டு தேய்மானம், மூட்டு வலிகள் ஆகியவற்றையும் குணப்படுத்தி விடலாம்.