ஆண்மை குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் மற்றும் அறிகுறிகள் இது தான்!

0
680

ஆண்மை குறைபாடு என்பது இரண்டு வகைப்படும். ஓன்று மனித விந்தணுவின் திறன் மற்றொன்று மனித விந்தணுக்களின் எண்ணிக்கை. இவை இரண்டும் ஆண்மகனுக்கு மிக முக்கியம்.

ஆண்மை குறைபாடு என்பது ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஹார்மோன்களில் ஏற்படும் இடையூறு காரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தம் கூட ஆண்மை குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

அதிகப்படியான உடற்பயிற்சி, அதிகப்படியான உடற்சூடு, சரியான நிலையில் வளராத விதை பைகள் போன்ற முக்கிய காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
அதிகமான உடலுழைப்பு, மிகுந்த மனக்கவலை, புதிய பெண்ணுடன் பாலுறவு, புதிய சூழலில் படபடப்பான நிலையில் பாலுறவு கொள்ளுதல், அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப் பழக்கம், நீரிழிவு, மனநோய்கள், இரத்தக் கொதிப்பு, சில நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் ஆண்மை குறைவு ஏற்படுகிறது.

இராசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத் துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போவது, உடலுறவு சார்ந்த விஷயங்களில் அக்கறை குறைவது கூட ஒருவிதமான ஆண்மைகுறைவிற்கு அறிகுறிதான். முன் கூட்டியே அல்லது விரைவாக விந்து வெளிப்படுதல் போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.

பெரும்பாலும் ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளதா என சிறுநீர் அல்லது இரத்த பரிசோதனைகளை வைத்து எளிது கண்டறியமுடியும். உங்களுக்கும் இதுபோன்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

Previous articleஅனாதை இல்லத்தில் ஆபாசபடம் காட்டி சிறுமிகளுக்கு நடந்த கொடுமை! சிக்கிய உரிமையாளர்!
Next articleவீட்டுல குடும்பம் நடத்தும் கொசு மற்றும் கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க இப்படி செய்ங்க!