ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை க‍ல‍-வி கொள்ள முடியும்? எவ்வளவு நேரம் இடைவெளி?

0

உட-லுறவில் உச்சக் கட்டத்தை அடைந்த பிறகு, இரண்டாம் முறையாக உறவுக்கு தயாராவது கடினம் என்று அநேகர் நினைக்கிறார்கள். பெண்கள், உச்சக் கட்டத்தை அடைந்த சில நொடிகளிலே இயற்கையாகவே அடுத்தச் சுற்றுக்கு தயாராகி விடுவார்கள் என்றும், ஆண்களை பொறுத்தமட்டில் அடுத்த முறை உறவு கொள்ள உடனடியாக தயாராவது எளிதல்ல.

அது அவர்களின் குறையல்ல; ஆண்களின் உயிரியல் அமைப்பே அத்தகையதுதான்.

பாலி-யல் களைப்பு

ஒருமுறை உட-லுறவு கொண்டபின், உடல் தன்னை மீட்டெடுக்கும் நேரம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஒருவர் பாலுறவின் உச்சத்தை தொட்ட மறுகணத்திலிருந்து பாலி-யல் களைப்பு என்னும் வேளை தொடங்குகிறது. பாலுறவின் உச்சக்கட்டத்திற்கும் மீண்டும் பாலி-யல் கிளர்ச்சி அடைவதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை இயல்பு நிலைக்கு திரும்புதல் என்றும் கூறலாம்

பாலுறவில் பெண்களுக்கு பல உச்சக்கட்ட நிலைகள் இருப்பதால். பாலி-யல் களைப்பு ஆண்கள் அளவுக்கு நீண்டதாக இருப்பதில்லை. ஆண்களை பொறுத்தமட்டில் ஆண் பாலி-யல் களைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. விந்து வெளியேறும் கணத்திலிருந்து சில நிமிடங்கள் முதல் சிலருக்கு சில நாள்கள் வரைக்கும் பாலி-யல் களைப்பு நீடிக்கலாம்.

பாலி-யல் களைப்பை பாதிக்கும் காரணிகள்

புதிதாக பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பாலி-யல் களைப்பு, எதிர்பாராமல் எப்போதாவது ஏற்படும் ஒன்று. பாலி-யல் களைப்பை தீர்மானிப்பதில் பல விஷயங்களுக்கு பங்கு உண்டு. தனிப்பட்ட மனிதனின் உணர்ச்சி, இணையுடன் உணர்வுப் பூர்வமான உறவின் நெருக்கம், மது பழக்கம், நுனித்தோல் நீக்கம், வேறு நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள், தனிப்பட்ட மனிதனின் உணர்வுப் பூர்வமான திருப்தி ஆகியவையே இதை தீர்மானிக்கின்றன.

ஆண்களுக்கு பாலி-யல் களைப்பு: உயிரியல் ரீதியானதே!

ஒருமுறை பாலுறவு கொண்ட பின்னர், மறுபடியும் உறவில் ஈடுபட முடியாததை பல ஆண்கள் தர்மசங்கடமாக உணர்கின்றனர்; மனமுடைந்து போகின்றனர். குறிப்பிட்ட ஆண்களுக்குள்ள குறையாக இது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், ஆண் உடலுக்கான பொதுவான சில உடற்ரீதியான காரணிகளாலே இக்களைப்பு ஏற்படுகிறது.

விந்து வெளிப்பட்டவுடன், ஆணின் உடல் அதிக வேலையினிமித்தம் களைப்புற்றதுபோல் தளர்வடைகிறது. பரிவு நரம்பு மண்டலம் உடலை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது. பரிவு நரம்பு மண்டலம், சில நியூரோடிரான்ஸ்மிட்டர் என்னும் நரம்பிய கடத்திகளை தூண்டி, ஆண்குறி விறைப்புக்கு காரணமாகும் தசைகளை தளர்த்துகிறது.

பாலி-யல் களைப்பு நபருக்கு நபர் வேறுபடுமா?

உடலின் ஆரோக்கியம், பாலி-யல் வேட்கை மற்றும் உணவு ஆகியவை ஆணின் பாலி-யல் களைப்பு காலத்தை தீர்மானிப்பதிலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் மைய பங்கு வகிக்கின்றன. வெவ்வேறு நபர்களுக்கு இக்கால அளவு வித்தியாசமாக இருக்கிறது.

பாலி-யல் களைப்பு எவ்வளவு நேரம் நீடிக்கும்?

பதின்ம வயது இளைஞனுக்கு பாலி-யல் களைப்பு சில நிமிடங்களே நீடிக்கும். முப்பது வயதான ஆண் என்றால் மீண்டும் கிளர்ச்சியுறுவது சற்று கடினம். ஐம்பது மற்றும் அதற்கு மூத்தவர்கள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே உச்சக்கட்டத்தை அடைய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பாலி-யல் களைப்பு நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளுள் ஒன்று வயது. வயதை பொறுத்து ஒருவர் மறுபடியும் பாலி-யல் கிளர்ச்சியுறுவதற்கு 12 முதல் 24 மணி நேரம் ஆகக்கூடும். நாற்பது வயதில் முக்கியமான மாற்றம் வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன,

பாலி-யல் களைப்பு நேரத்தை குறைப்பது எவ்வாறு?

பாலி-யல் செயல்பாடு, கிளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை பாலி-யல் களைப்பு நேரத்தை பாதிக்கும் காரணிகளாகும். இந்த மூன்று விஷயங்களையும் மேம்படுத்தினால் பாலி-யல் களைப்பு நீடிக்கும் நேரத்தை குறைக்கலாம்.

பாலி-யல் செயல்பாடு

உட-லுறவு கொள்ளும் முன்பு மது அருந்துவதை தவிர்ப்பது, விறைப்பு தன்மையில் குறைபாடு இருந்தாலோ, வேறு ஏதாவது மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிப்பது, இடுப்புப் பகுதியை பலப்படுத்தும் கூபக உடற்பயிற்சிகள் செய்வது ஆகியவற்றின் மூலம் பாலி-யல் செயல்பாட்டினை அதிகரிக்கலாம்.

பாலி-யல் கிளர்ச்சி

புதிய நிலைகளில் உட-லுறவு கொள்ளுதல், உட-லுறவு கொள்ளும் முன்பு சுய புணர்ச்சி செய்யாமலிருத்தல், உட-லுறவுக்கிடையேயான நேரத்தை மாற்றியமைத்தல், இணையோடு சேர்ந்து புதிய முறைகளை செய்து பார்த்தல் ஆகியவற்றின் மூலம் கிளர்ச்சியை தூண்டலாம்.

சுறுசுறுப்பாக செயல்படுதல் மற்றும் ஆரோக்கியமான உணவு பொருள்களை சாப்பிடுதல் ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 18.10.2019 ! வெள்ளிக்கிழமை !
Next articleசெக்சிஸில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்?