ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் பிரச்சனைகள்!

0

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் தான் வீரமானவர்கள், தைரியமானவர்கள், உடற்தகுதி உடையவர்கள் என கூறுவார்கள். ஆனால், பெண்களை விட இதய நோய், கல்லீரல் பாதிப்பு, வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணத்தால் உண்டாகும் தற்கொலைகள் என உடல், மன ஆரோக்கியம் இரண்டு வகையிலும் அதிகமாக உயிரிழப்பது ஆண்கள் தான்.

இனி, எந்தெந்த உறுப்புகளில் ஆண்களுக்கு அதிக எதிர்மறை தாக்கம் காணப்படுகிறது மற்றும் எந்தெந்த உடல்நலக் குறைபாட்டின் காரணமாக ஆண்கள் மத்தியில் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்பது பற்றி காண்போம்…

இதயம்
ஆண்கள் அதிகமாக உயிரிழப்பது இதய நோய்களின் காரணமாக தான். அதிலும், இளம் வயதிலேயே இதய நோயால் இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாம்.

கல்லீரல்
பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு தான் கல்லீரல் சார்ந்த நோய் தாக்கமும் அதிகமாக உண்டாகிறது. மது பழக்கம் இதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.

தண்டுவடம்
தற்போதைய இளம் ஆண்கள் மத்தியில் 80% தண்டுவடம் சார்ந்த பிரச்சனைகள் எழுகிறது என கூறப்படுகிறது. சரியான உடற்பயிற்சி இன்மை, உட்கார்ந்தே வேலை செய்வது போன்றவை இதற்கான காரணியாக இருக்கின்றன.

நீரிழிவு
சர்க்கரை நோய் காரணத்தால் உயிரிழக்கும் எண்ணிக்கையிலும் ஆண்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.

வேலைப்பளு
வேலைப்பளு காரணத்தால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையில் 94% பேர் ஆண்கள், 6% பேர் பெண்கள் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மூன்று முக்கிய காரணங்கள்
அதிகப்படியான ஆண்களின் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பது, இதய நோய்கள், தற்கொலை, விபத்துக்கள் ஆகிய மூன்று தான்.

படிப்பு
படிப்பதில் மந்தம், ஞாபக திறன் குறை கூட ஆண் குழந்தைகள் மத்தியில் தான் அதிகமாக இருக்கிறதாம். ஏறத்தாழ 70% ஆண் குழந்தைகள் மத்தியில் இந்த கோளாறு காணப்படுகிறது.

Previous articleஆண்களுக்கு தேவையான 7 மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்!
Next articleபழங்களின் தோல்களை சாப்பிட்டால் என்ன ஆகும்! அறிந்து கொள்வீர்களா!