ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள்! அதிர்ச்சித் தகவல் வெளியீடு!

0
558

தலைமுடி வளர்வதற்காக பயன்படுத்தப்படும் புரோபேஷியா என்ற மருந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களான பின்பு தங்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டதை அறிந்து அதிர்ந்து போயினர்.

இந்த விடயம் குறித்து புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியதாவது, புரோபேஷியாவில் உள்ள Finasteride என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுத்து விடுகிறது என்றார்.

மேலும் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு சிகிச்சையைத் தொடங்கும் முன்பு அதன் நன்மை, தீமையை அறிந்து பின்பற்ற வேண்டும் என்றார்.

Previous articleஜாதிக்காய் நேச்சுரல் வயகரா!
Next articleஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!