ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் ஆபத்தா? அதிர்ஷ்டமா?

0

முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது. நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம். சிலருக்கு கருப்பையும், பச்சையையும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது. என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார்.

அந்த பெற்றோர்கள் இல்லையே, எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும், கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல்வார்கள்.

அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும். லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.

பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு, கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்

செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக – அகோரமாக காட்சி அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது. பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும். வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது. அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம்.

பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள். பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!
Next articleதினமும் நீங்கள் நீர் அருந்துகிறீர்கள் தானே? அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்! ஓர் ஆரோக்கிய அலசல்!